Banner After Header

எந்தப் படமும் செய்யாத சாதனையை செய்யப் போகும் ‘2.0’!

0

ஜினிகாந்த் – இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் சுமார் 450 கோடி ரூபாய் செலவில் தயாராகி உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘2.0’.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் வில்லனாக அக்‌ஷய்குமாரும், நாயகியாக எமி ஜாக்சனும் நடித்திருக்கிறார்கள்.

சென்ற வாரம் வெளியான இப்படம் ரிலீசான 5 நாட்களில் 400 கோடி ரூபாயை வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனையைத் தொடர்ந்து தற்போது சீன நாட்டில் மற்றுமொரு சாதனையைச் செய்ய உள்ளது.

2.0 திரைப்படம் அடுத்த வருடம் மே மாதம் சீனாவில் ரிலீசாக உள்ளது. இதுவரை அங்கு எந்த மொழிப்படமும் ரிலீசாகாத வகையில் மிக அதிகமான எண்ணிக்கையிலான தியேட்டர்களில், அதாவது சுமார் 10000 தியேட்டர்கள் மற்றும் 47000 3-டி திரைகளை உள்ளடக்கிய 56,000 தியேட்டர்களில் ‘2.0’ திரைப்படம் வெளியாகவுள்ளது.

இதற்காக சீனாவில் உள்ள மிகப்பெரிய பட வெளியீட்டு நிறுவனமான HY Media என்கிற நிறுவனத்துடன் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இந்த HY Media நிறுவனம்தான் மிக நீண்ட காலமாக சீனாவில் ஹாலிவுட் பட நிறுவனங்களான Sony, 20th Century Fox, Disney, Warner Bors, Universal ஆகியவை தயாரிக்கும் ஹாலிவுட் படங்களை டப்பிங் செய்து வெளியிட்டு வருகிறது. இதே நிறுவனம் ‘2.0’-வை வெளியிடுவதால் நிச்சயமாக படத்திற்கு சீனாவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை அது ஏற்படுத்தும்.

சீனாவில் ஒரு வெளிநாட்டு திரைப்படம் திரையிட வேண்டுமெனில் அதற்கான சென்சார் அனுமதி மற்றும் வெளியீட்டுக்கான அனுமதி போன்றவைகள் கிடைக்க குறைந்தபட்சம் 3 மாதங்களாகவது ஆகும் என்பதால் ‘2.0’ திரைப்படம் அடுத்த வருடம் மே மாதம் வெளியிடப்படும் என்று லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.