Banner After Header

’96’ பட ரிலீஸ் விவகாரம் – ஒன்றரை கோடியை விஜய் சேதுபதிக்கு திருப்பிக் கொடுக்கும் விஷால்

0

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ’96’ திரைப்படம் அக்டோபர் 4-ம் தேதி வெளியானது.

இந்நிலையில், தயாரிப்பாளர் நந்தகோபாலுக்கு ரூ.1.50 கோடி தொகையை பைனான்ஸ் மூலம் நடிகர் விஷால் தரப்பில் வாங்கிக் கொடுக்கப்பட்டது .

அந்தத் தொகையை தயாரிப்பாளர் நந்தகோபால் ’96’ பட ரிலீஸின் போது திரும்ப தறுவதாக கூறியதால் அக்டோபர் 4-ம் தேதி பட ரிலீஸுக்கு முன்புவரை அது தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சு வார்த்தை சரியான முடிவை எட்டாததை அடுத்து ’96’ படத்தின் நாயகன் விஜய் சேதுபதி அந்த தொகையை தருவதாக கூறியபிறகு பிரச்னை தீர்ந்து ’96’ படம் ரிலீஸானது.

இது தொடர்பாக தற்போது விஷால் தரப்பில் விசாரித்த போது, ”விஷால் அவர்கள் தொடர்ந்து பைனான்ஸ் ரீதியாக பல வலிகளை சந்தித்து வருகிறார். அந்த மாதிரி ஒரு வலியை நடிகர் விஜய் சேதுபதிக்கு கொடுக்க அவர் விரும்பவில்லை. இந்த சம்பவத்துக்கு பிறகு நேற்று இரவு முழுக்க அவர் உறங்கவும் இல்லை. ஆகவே, விஜய்சேதுபதி கொடுப்பதாக கூறியுள்ள ரூ.1.50 கோடி தொகையை தர வேண்டாம். அதுக்கான பொறுப்பை மீண்டும் விஷாலே ஏற்றுக் கொள்கிறார்.

தயாரிப்பாளர் நந்த கோபாலுக்கு பைனான்ஸ் மூலம் வாங்கிக் கொடுத்த ரூ1.50 கோடி தொகையை விஷால் நந்தகோபாலிடமே பெற்றுக் கொள்கிறார். அதுவரைக்கும் அந்த தொகைக்கு விஷால் அவர்கள் வட்டியும் கட்டுவார். ஆகவே, பைனான்ஸ் விஷயத்தில் தான் சுமக்கும் வலியை விஜய் சேதுபதி சுமக்க வேண்டாம்” என்று நினைத்த விஷால் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார் விஷால்.

Leave A Reply

Your email address will not be published.