Banner After Header

ஆக்கம் – விமர்சனம்

0

aakkam-review

RATING : 2/5

துவரை நாம் பார்த்து பார்த்து சலித்து பழக்கப்பட்டு விட்ட இன்னொரு வட சென்னை வன்முறைக்களம் தான் இந்த ‘ஆக்கம்’.

சேர்ந்து கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை, செயின் பறிப்பு என சட்டத்துக்கு விரோதமான எல்லா தொழில்களையும் செய்து இஷ்டப்படி வாழ்கிறார் நாயகன் சதீஷ் ராவண். நம்மளைப் பார்த்தா ஊரே நடுங்கணும் என்கிற அளவுக்கு பெரிய ரெளடியாக வேண்டும் என்பது தான் அவருடைய லட்சியம்.

அப்படிப்பட்டவரை ‘டேய் ஏதாவது பெருசா கொலையோ, கொள்ளையோ செஞ்சிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு வருவியா? தம்மாத்துட்டு செயின் பறிக்கிற வேலையைச் செஞ்சிட்டு மானத்தை வாங்கிற” என்று ஆசீர்வாதமும் செய்கிறார் கஞ்சா விற்கிற அம்மா. அதோடு அதே ஏரியாவில் ஏரியாவில் தாதாவாக இருக்கும் ஒரு சேட்டிடமும் வேலைக்கு சேர்த்து விடுகிறார்.

இப்படிப்பட்ட ”ரொம்ப நல்லவனை” விரட்டி விரட்டி காதலிக்கிறார் நாயகி டெல்னா டேவிஸ்.

இன்னொரு பக்கம் நாயகனின் நெருங்கிய நண்பன் ஒருவனின் அம்மா தன் மகனை நாயகன் மற்றும் அவருடைய கூட்டாளிகளிடம் சேர விடாமல் படிப்பே எதிர்கால வாழ்க்கை என்று வளர்க்கிறார்.

இரண்டு விதமான பெற்றோர்களின் வளர்ப்பில் இரண்டு விதமான குணங்களுடன் வளரும் பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாக அமையும் என்பதே கிளைமாக்ஸ்.

ஹீரோ சதீஷ் ராவண் ஆள் பார்க்க கொஞ்சம் முரட்டு ஆசாமி என்பது போல காட்சியளித்தாலும் ஓப்பனிங்கில் சாவுக்குத்து போடுகிற காட்சியில் மாஸ் ஹீரோவுக்கான மாஸைக் காட்டுகிறார்.

படம் முழுக்க இவர் வருகிற காட்சியில் நடிக்கிறார் என்று தெரியாத வண்ணம் மிக அழகாகக் கேரக்டரோடு ஒன்றிப்போய் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

”சார் நீங்க நெஜமாலுமே கூவத்துல முங்கி எந்திருக்கிறீங்க…”

”எதுக்கு?”

”அப்பத்தான் தான் ரியலிஸ்ட்டிக்கா இருக்கும், ஆடியன்ஸும் எந்திருச்சு கைதட்டுவாங்க…”

படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு இப்படி நாயகனும், டைரக்டரும் கூடிப்பேசியிருக்கலாம். அதன்படியே அறிமுகக் காட்சியில் டைரக்டர் சொன்னபடி கூவத்தில் முழுகி எழுந்திருக்கிறார் ஹீரோ.

அதைப் பார்த்ததும் கைதட்டத் தோன்றவில்லை. முகம் சுளிக்கத் தான் தோன்றுகிறது. தேவையில்லாத அந்தக் காட்சி திணிப்பெல்லாம் தேவையா டைரக்டர் சார்?

நாயகியாக வரும் டெல்னா டேவிஸ் காதல் மயக்கத்தில் கெட்ட சகவாசம் கொண்ட இளைஞர்களை நம்பி மோசம் போகும் பெண்களுக்கு படிப்பினை.

வாலிப வயதில் ரெளடியாக இருந்து பின்னர் வயதானவுடன் திருந்தி வாழும் கேரக்டரில் வரும் ரஞ்சித் மனிதாபமானம் கொண்டவராக பண்பட்ட நடிப்பு.

இதுபோன்ற வட சென்னை கதைகளில் குத்துப்பாத்து என்றால் ஸ்ரீகாந்த் தேவா செட்டாகி விடுகிறார். காது கிழிகிற அளவுக்கு ஆர்மோனியப் பெட்டிகளை உருட்டியிருக்கிறார்.

ஒரே ஒரு பாடலில் வந்து போகிறார் பவர் ஸ்டார். டான்ஸ் மாஸ்டர்கள் தருண் மற்றும் சுஜாதா, ரஞ்சித், வடிவுக்கரசி, நாயகியின் அப்பாவாக வரும் கயல் தேவராஜ் என சின்னச் சின்ன கேரக்டர்கள் தங்கள் பங்கை சரியாகச் செய்திருக்கிறார்கள்.

ஏம்ம்பா.. வட சென்னை என்றாலே வெட்டு குத்து, ரத்தம், ரெளடியிசம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு தானா? அங்கெல்லாம் கோட்டும், சூட்டும் போட்ட நல்லவர்ன்னு ஒருத்தர் கூட கிடையாதா? இந்தக் கேள்வியை இந்தப்பட இயக்குநரும் கேட்க வைத்து விட்டார்.

நடப்பதைத்தானே காட்டுகிறோம் என்று காட்சிப்படுத்த எத்தனையோ நல்ல விஷயங்களை நம்மைச் சுற்றி நடக்கிறது. ஏன் இதே வட சென்னையிலே கூட நடந்திருக்கலாம். அடுத்த படத்திலாவது அந்த நல்லதைச் செய்யுங்கள் டைரக்டர் வேலுதாஸ் ஞான சம்பந்தம்.

ஆக்கம் – தலைப்பில் மட்டும்!

Leave A Reply

Your email address will not be published.