அக்‌ஷரா ஹாசனின் “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” டிரெய்லரை வெளியிட்டார் உலகநாயகன் கமலஹாசன் !

தற்போதைய நிலையில் தமிழ் சினிமாவில் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்ட படக்குழு அக்‌ஷரா ஹாசன் நடிக்கும் “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” படக்குழு தான். முன்னதாக விஜய் சேதுபதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட, நடிகை ஸ்ருதி ஹாசன் படத்தின் டீஸரை வெளியிட்டு அசத்தினார். இதனால் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்தனர் “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” படக்குழுவினர். மேலும் தற்போதைய அடுத்த நிகழ்வால் படக்குழு பேரின்ப நிலையை அடைந்திருக்கிறது. ட்ரெண்ட் லவுட் (Trend Loud) முதல் தயாரிப்பான “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” படத்தின் டிரெய்லரை அக்‌ஷரா ஹாசனின் பிறந்த நாளில் உலக நாயகன் கமலஹாசன் வெளியிட, இது படக்குழுவினரை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இயக்குநர் ராஜா ராமமூர்த்தி இது குறித்து கூறியதாவது….

சந்தேகமே இல்லாமல் கூறுவேன் எனது வாழ்வின் உச்சபட்ச மகிழ்ச்சியான தருணம் இது தான். இதை விட வாழ்வில் வேறென்ன பெரிய ஆசிர்வாதம் வேண்டும். இந்திய சினிமாவின் மிகப்பெரும் ஆளுமையான உலக நாயகன் கமலஹாசன், எங்களின் கோரிக்கையை ஏற்று டிரெய்லரை வெளியிட்டது, எங்கள் மொத்தக்குழுவையும் பெரும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும் ஒரு சிறப்பாக அக்‌ஷரா ஹாசனின் பிறந்த நாளில் டிரெய்லர் வெளியானது இன்னும் சந்தோஷம் தரும் நிகழ்வாகும். “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” படக்குழு கொண்டாட்டத்தில் ஈடுபட மேலும் ஒரு காரணமும் இப்போது சேர்ந்திருக்கிறது. அமெரிக்கவில் நடைபெறும் மதிப்புமிக்க இந்திய திரைப்பட விழாவான Caleidoscope Indian Film Festival Boston க்கு “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” படம் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு நல்ல விமர்சனங்களை பெற்ற கேடி படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஒரே தமிழ் திரைப்படம் “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” படம் மட்டும் தான் என்பது குறிப்பிடதக்கது. இப்படம் பாஸ்டன் (Boston) நகர திரையரங்குகளில் நவம்பர் 6 முதம் 8 ஆம் தேதி வரை திரையிடப்படுகிறது.