முழுநீள ஆக்‌ஷனில் இறங்கிய விஷால் – சுந்தர்.சி கூட்டணி!

ந்த ஜானரைக் கொடுத்தாலும் அதில் காமெடியை தூக்கலாக வைத்து ரசிகர்களை கட்டிப்போடுவதில் கை தேர்ந்தவர் இயக்குனர் சுந்தர்.சி. அவரது இயக்கத்தில் விஷால் நடிப்பில் தயாராகி வரும் படம் தான் ‘ஆக்‌ஷன்’.

பெயருக்கு ஏற்றாற்போலவே இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு முழு நீள ஆக்‌ஷன் படமாக இந்தப்படம் தயாராகி வருகிறது.

விஷால் இப்படத்தில் மிலிட்டரி கமாண்டோ ஆபீஸராக நடிக்கிறார். ஒரு உண்மையை கண்டுபிடிக்க பல நாடுகள் செல்கிறார். அங்கே அவர் செய்யும் ஆக்‌ஷன், சேசிங் என விறுவிறுப்பாக காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் அமைத்துள்ளார்கள்.

சமீபத்தில் தேசிய விருது பெற்ற இவர்கள் இப்படத்தில் பல வித்தியாமான சண்டை காட்சிகளை அமைத்துள்ளார்கள். இதில் பல காட்சிகளில் விஷால் டூப் இல்லாமல் நிஜமாகவே நடித்திருப்பது மெய் சிலிர்க்க வைக்கும். இதற்காக பல கோடிகள் செலவு செய்திருக்கிறார் தயாரிப்பாளர் ட்ரைடென்ட் ரவி.

Related Posts
1 of 239

மிக பிரம்மாண்ட படைப்பான இப்படத்தின் படப்பிடிப்பு துருக்கி நாட்டில் அசார்பைசான், கேப்படோசியா, பாகு, இஸ்தான்புல், தாய்லாந்து நாட்டில் கிராபி தீவு, பேங்காக் போன்ற இடங்களில் 50 நாட்கள் படமாக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்தியாவில் ஜெய்ப்பூர், ரிஷிகேஷ், டேராடூன், ஹைதராபாத், சென்னை போன்ற இடங்களிலும் 50 நாட்கள் பரபரப்பாக படமாக்கப்பட்டது.

விஷால் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மற்றொரு நாயகியாக மலையாளத்தில் பிரபலமான ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் யோகி பாபு, ராம்கி, சாயாசிங், ஷாரா, பழ.கருப்பைய்யா, பிரபல இந்தி நடிகர் கபீர் சிங் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

முழுப்படப்பிடிப்பும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.