மாறுவோம் மாற்றுவோம் ஆரியின் ஆறுதல் நிவாரணம்


கொரோனாவால் பெரும் ஊரடங்கு உலகெங்கும் கடைப்பிடிக்கப் பட்டு வருவது அடித்தட்டு மக்களை அதிகமாகப் பாதித்துள்ளது. அவர்களுக்கு உதவும் வகையில் திரை நட்சத்திரங்களில் வெகுசிலரே செயல்பட்டு வருகிறார்கள். அவர்களில் ஒருவராக நடிகர் ஆரி அருஜுனாவும் இணைந்துள்ளார்.

நடிகர் ஆரி அருஜுனாவின் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக நேற்று மே 17
சேலம் தாரமங்கலம் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் 410 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணமாக அரிசி, பருப்பு, உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்கள் வழங்கினர்.