Banner After Header

சினிமாக்காரர்களின் ஒற்றுமை! – பார்த்திபன் பெருமிதம்

0

ந்தியாவிலேயே முதன் முதலில் தயாரிப்பாளர்களுக்கென தனியான மாஸ்டரிங் யூனிட்டை உருவாக்கியிருக்கும் மைக்ரோ ப்ளெக்ஸ் ஸ்டுடியோஸ் திறப்பு விழா ஜூலை 15-ம் தேதி சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

பெப்சியின் தலைவர் ஆர்.கே. செல்வமணி, தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் எஸ்.ஆர்.பிரபு , ஃபைவ் ஸ்டார் கதிரேசன், நடிகர் பார்த்திபன், மயில்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன் திரையுலகினரின் ஒற்றுமை குறித்தும் பெருமிதப்பட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, ”இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது நாற்காலிகள் எல்லாம் பின்னாடி இருந்தது. நாங்க தான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னாடி தள்ளிட்டு வந்தோம். ஏனென்றால் தமிழ் சினிமாவை முன்னுக்கு கொண்டு வரும் வழி இந்த நாற்காலிகளை முன்னுக்கு கொண்டு வருவது தான்.

அது போலதான் இந்த மைக்ரோ ப்ளெக்ஸ் ஸ்டுடியோவின் முதல் படி.

ஒருவன் பார்மஸியில் கேட்கிறான் ஏன்பா தேள் கொட்டியது என்று மருந்து வாங்கி சென்றாயே இப்போது மறுபடியும் எதுக்கு வந்தாய் என்று கேட்கிறான். அதற்கு அவர் மருந்து கொட்டி விட்டது என்றான். தேள் கொட்டினால் கூட பரவாயில்லை மருந்து கொட்டியது என்றால் ரொம்ப கஷ்டம்.

அதுபோல் சினிமா வியாபாரத்தில் என்ன பிரச்சனையும் இருக்கலாம். அதற்கு நமக்குள்ளேயே ஒற்றுமை இருந்தால் தான் அதை சீர் செய்ய முடியும். குறிப்பாக செல்வமணி பெப்சியின் தலைமைக்கு அவர் வந்ததும் நல்ல ஒற்றுமை வந்துள்ளது. நான் கிட்டத்தட்ட 25 வருடம் சினிமாவில் உள்ளேன். அப்போது இல்லாத ஒற்றுமை இப்போது வந்துள்ளது” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.