ஓடிடிக்கு வரும் சூர்யா விஜய்சேதுபதி

Related Posts
1 of 9

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட துறைகளில் சினிமாத்துறையும் முக்கியமான ஒன்று. குறிப்பாக தியேட்டர்க்காரர்கள் வருமானம் என்பதைப் பார்த்தே பல மாதங்கள் ஆகிவிட்டன. படத்தைத் தயாரித்து ரெடியாக கையில் வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் ஓடிடி ப்ளாட்பார்ம் நோக்கி ஓடுகிறார்கள். சமீபத்தில் அந்த ரேஸில் சில நடிகர்களும் இயக்குநர்களும் இணைந்துள்ளனர். அவர்களும் ஓடிடியில் நடிக்க வேண்டும் படம் இயக்க வேண்டும் என்ற தீவிர முடிவில் இறங்கியுள்ளனர். அதில் நடிகர் சூர்யாவும் ஒருவர். மணிரத்னம் அமேசான் நிறுவனத்திற்காக தயாரிக்க இருக்கும் வெப்சீரிஸில் சூர்யா நடிக்க இருக்க இருக்கிறார் என்பது தான் ஹாட்நியூஸ். மேலும் நடிகர் விஜய்சேதுபதியும் வெப்சீரிஸ் பக்கம் திரும்ப இருக்கிறார்