விஜய் சேதுபதிக்கு “வெயிட்டான” ஆல்பம் ஒன்றைச் சமர்ப்பணம் செய்யும் ஸ்ரீதர் மாஸ்டர்!

தமிழ் சினிமா டான்ஸ் மாஸ்டர்களில் முக்கியமானவர் ஸ்ரீதர் மாஸ்டர். தனித்துவம் கொண்ட அவரது நடன அசைவுகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Related Posts
1 of 2

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தளபதி விஜய்க்கு “ரசிகனின் ரசிகன்” என்ற ஆல்பம் ஒன்றை சமர்ப்பணம் செய்திருந்தார். அந்த ஆல்பம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதைத் தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு “அண்ணே வெயிட்டு வெயிட்டு” என்ற ஆல்பம் பாடலைச் சமர்ப்பணம் செய்யத் திட்டமிட்டுள்ளார் ஸ்ரீதர் மாஸ்டர். ஆரம்பகட்ட பணிகளில் இருக்கும் இந்தப் பாடல் விரைவில் அவரின் ஆத்மார்த்தமான சமர்ப்பணமாக வெளியாக உள்ளது.