இனிமே ‘சமந்தா அக்கினேனி’ : கணவரின் வீட்டாருக்காக பெயரை மாற்றிய சமந்தா!

0

samantha1

கெளதம் மேனன் இயக்கிய ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ தமிழ்ப்பதிப்பில் த்ரிஷா நடித்த கேரக்டரில் தான் தெலுங்கில் சமந்தா நடித்தார். அதில் சமந்தாவுக்கு ஜோடியாக நடித்தவர் நாக சைதன்யா. அப்போதே சமந்தாவை காதலிக்கத் தொடங்கி விட்டார்.

ஆரம்பத்தில் சமந்தாவை தங்கள் வீட்டு மருமகளாக ஏற்றுக் கொள்ள நாகர்ஜூன் – அமலா தம்பதியினர் ஏற்றுக் கொள்ள தயக்கம் காட்டி வந்தனர்.

அதற்கு சமந்தா ஏற்கனவே நடிகர் சித்தார்த்துடன் பல ஆண்டுகளாக காதலில் கட்டு உருண்டவர் என்பதே காரணம் என்று சொல்லப்பட்டது.

பின்பு தங்கள் காதலில் நாக சைதன்யாவும், சமந்தாவும் உறுதியாக நின்றதால் ஒருவழியாக சம்மதம் தெரிவித்தார் நாகர்ஜூன்.

அதையடுத்து நிச்சயதார்த்தமும், சென்ற வாரம் கோவாவில் திருமணமும் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

தற்போது நாகர்ஜூன் குடும்பத்தில் ஒருவராகி விட்ட சமந்தா தன்னுடைய பெயரையும் கணவர் வீட்டாரின் வேண்டுகோளுக்கிணங்க மாற்றியிருக்கிறார்.

நாக சைதன்யா அக்கினேனி குடும்பத்தை சேர்ந்தவர். இதனால் தன் காதலுக்கும், திருமணத்துக்கும் சம்மதம் தெரிவித்த அவர்களது குடும்பத்தினருக்கு நன்றி செலுத்தும் விதமாக, ‘சமந்தா ருத் பிரபு’ என்கிற தனது பெயரை ‘சமந்தா அக்கினேனி’ என்று மாற்றியிருக்கிறார் சமந்தா.

அதோடு தனது டிவிட்டர் பக்கத்திலும் பெயரை மாற்றி விட்டார் சமந்தா.

Leave A Reply