புது அவதாரமெடுத்த நடிகை சந்தோஷி!

மக்கு தேவையான ஆடைகள், ஆபரணங்கள் மட்டுமல்லாது பெண்களுக்கென பிரத்யேகமாக தனி அழகு நிலையம் அனைத்தையும் ஒரே இடத்தில் பெறமுடியும் என்றால் அது ‘ப்ளஸ்’ஸில் (PLUSH) மட்டும் தான்.

சென்னையில் மற்ற எந்த இடத்திலும் இல்லாத ஒரு சிறப்பம்சம் பிளஸ்ஸில் இருக்கிறது என்றால் அது மணப்பெண்களுக்கான திருமண உடை, கவரிங் ஆபரணங்கள் ஆகியவற்றை இங்கே ஒரே இடத்தில் வாடகைக்கு பெறமுடியும் என்பதுதான்.

இந்த கடைக்கு சொந்தக்காரரான நடிகை சந்தோஷியிடம் பேசியபோது :

நான் சினிமாவில் கடந்த 15 வருடங்களாக இருக்கிறேன். ஆனால் சினிமா ஒன்று மட்டுமே என் கனவு இல்லை..இன்னும் பல பெரிய கனவுகள் எனக்கு இருக்கின்றன. மீடியாவில் நான் இருப்பதால் எனக்கு மேக்கப்பிற்கான அழகு சாதனங்கள், ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் பற்றி நன்றாகவே தெரியும்.

நான் மற்ற அழகு நிலையங்களில் இருந்து என்னுடைய ‘ப்ளஸ்’சை பாரம்பரியத்துடன் வடிவமைத்திருள்ளேன்.. இந்த ஸ்டுடியோ முழுமைக்கும் பார்க்கும்போது இதற்கென்ற ஒரு தனி அடையாளம் இருக்கும்.

வடிவமைக்கப்பட்ட சேலைகள், விழாக்களுக்கான ஆடைகள், சல்வார், குர்த்தி, டி சர்ட் என அனைத்தும் இங்கே கிடைக்கும். அதுமட்டுமல்ல.. நாங்கள் ஆடைகளையும், ப்ளவுஸ்களையும் கூட வடிவமைத்து தருகிறோம் என்றார்.