உலக குழந்தைகள் தினத்தில் த்ரிஷாவுக்கு கிடைத்த கெளரவம்!

0

trisha

கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ்சினிமாவில் கோலோச்சி வரும் நடிகை த்ரிஷா நாய்கள் மீது எப்போதுமே அலாதி பிரியம் கொண்டவர்.
நடிப்பது மட்டுமின்றி சமூக சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அவர் ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃபின் பிரபல தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் கேரள அரசும் யுனிசெஃப் நிறுவனமும் இணைந்து தயாரித்த, குழந்தைகளுக்கு தட்டம்மை ஊசி போட வலியுறுத்தும் விளம்பரத்தில் தோன்றி நடித்தார் த்ரிஷா. அதோடு தற்போது விலங்குகள் நலன், குழந்தைகள் கல்வி போன்றவற்றுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கிறார். அவருடைய இந்த சமூக ஈடுபாட்டுக்கு அங்கீகாரம் தரும் வகையில் ‘யுனிசெஃபின் பிரபல தூதர்’ என்ற பதவியை அவருக்கு வழங்கியுள்ளனர்.

த்ரிஷாவை யுனிசெஃப் தூதராக அறிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற த்ரிஷா பேசுகையில், “இது எனக்குப் பெரிய கெளரவம். தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வி, சுகாதாரம், குழந்தைகள் பாதுகாப்புக்காக தொடர்ந்து நான் குரல் கொடுப்பேன். பெண் குழந்தைகள் 18 வயது வரை கட்டாயம் கல்வி பயின்றால் குழந்தை திருமண முறையை ஒழித்து விடலாம்,” என்ற த்ரிஷா 34 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

தென்னிந்திய சினிமாவிலிருந்து ஒரு நடிகைக்கு யுனிசெஃப் அமைப்பின் அங்கீகாரம் கிடைத்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply