படப்பிடிப்பில் நயன்தாராவின் ரசிகராகவே மாறிப்போன ‘ஐரா’ டைரக்டர்!

யன்தாரா முதல் முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் ‘ஐரா’.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கும் இப்படத்தை சர்ஜூன் இயக்குகிறார்.

நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜே.பீ உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

Related Posts
1 of 79

‘ஐர’ என்றால் யானை என்று அர்த்தம். இது ஒரு சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படம். நயன்தாராவின் 63-வது திரைப்படமாக தயாராகும் இப்படத்தைப் பற்றி பேசிய இயக்குனர் சர்ஜுன் நயன் தாராவைப் பற்றி புகழ்ந்தார்.

இந்தப் படத்தை நான் இயக்கும்போது படப்பிடிப்பில் அவரது நடிப்பை ஒரு ரசிகராக பார்த்து வியந்தேன். படத்துக்கு படம் அவர் தன் நடிப்பை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

இந்த படத்தில் நயன்தாராவை இரு பரிமாணங்களில், குறிப்பாக ‘பவானி’ என்ற கதாபாத்திரத்தை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.