அஜித்துக்கு ஒபாமா அழைப்பு! : அண்டப் புளுகு… ஆகாசப் புளுகு…

0

ajith1

சைனாவுல ஜாக்கிசான் கூப்ட்டாக… ரஷ்யாவுல மரியா ஷரபோவா கூப்ட்டாக…

இப்படியெல்லாம் சமூகவலைத் தளங்களில் தங்கள் அபிமான ஹீரோவைப் பற்றி ”அள்ளி விடுவதில்” அஜித் ரசிகர்கள் வேறு எந்த ஹீரோக்களின் ரசிகர்களும் மிஞ்சவே முடியாது.

சென்னையில் வெள்ளம் வந்த போது அஜித் தன்னுடைய வீட்டில் நூற்றுக்கணக்கான மக்களை தங்க வைத்து சாப்பாடு போட்டார் என்று அள்ளி விட்டார்கள். அதோடு வெள்ள நிவாரண நிதியாக் 20, 30 என லட்சங்களில் பணத்தை நிதியாகக் கொடுத்தார் என்றெல்லாம் அளந்து விட்டார்கள் அஜித் ரசிகர்கள்.

ஆனால் அப்படியெல்லாம் நல்ல காரியங்கள் நடந்ததாக இந்த நாள் வரை அஜித் தரப்பிலிருந்து மீடியாக்களுக்கு எந்த அதிகாரப்பூர்வமான செய்தியும் வந்ததாக வரலாறு இல்லை.

அஜித்தைப் பொருத்தவரை இந்த நிமிடம் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை அவரே வெளியில் சொன்னால் தான் உண்டு. மற்றபடி அவர் சம்பந்தப்பட்டு வரும் செய்திகள் அனைத்துமே அதிகாரப்பூர்வமானதாக இருக்காது என்பதே நிஜம்.

உண்மை இப்படியிருக்கையில் கடந்த சில தினங்களாக அஜித்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது என்று சமூகவலைத் தளங்களில் பீதியக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள் மேன்மைமிகு ரசிகர்கள்.

படப்பிடிப்பு இருந்தால் தவிர மற்ற நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் வராத அஜித்தை ஏன் ஓபாமா அழைக்க வேண்டும்?

ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் விரைவில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் அதிபர் பணியிலிருந்து விலகும் ஒபாமா தன் சார்பில் பிரம்மாண்டமான விருந்து நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்கிறார்.

ஹாலிவுட், பாலிவுட்டிலிருந்து பல பிரபலங்கள் கலந்து கொள்ளப்போவதாகச் சொல்லப்படும் இந்த விழாவுக்குத்தான் கோலிவுட்டில் அஜித்துக்கு அழைப்பு வரும் என்று செய்திகள் வந்திருக்கிறதாம்.

அஜித்தை எப்படி ஓபாமாவுக்குத் தெரியும் என்று கேட்பவர்களுக்கு ஓபாமா அஜித்தின் ஆலுமா டோலுமா பாடலுக்கு மிகப்பெரிய ரசிகராம். அதில் அஜித்தின் ஆட்டத்தைப் பார்த்து மிகவும் பிடித்துப் போய் தனது விருந்து விழாவுக்கு அஜித்தை அழைக்க திட்டமிட்டிருக்கிறார் ஓபாமா என்று அளந்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.

அஜித் ரசிகர்களின் இந்த பரப்புரைக்கு ”அண்டப்புளுகு…” ”ஆகாசப் புளுகு…” என்று பதிலடி கொடுத்து வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.

Leave A Reply