உங்கள் பொக்கிஷமான புகைப்படங்களை இலவசமாக பிரிண்ட் போடணுமா? : அப்ப இங்க வாங்க!

0

photo

நாம் கடந்து வந்த நிகழ்வுகளை நமது புகைப்படங்கள் மூலமாக நினைவுப் படுத்தி மகிழ்ந்துக் கொள்வதோடு, நாம் யார், என்பதையும் நமது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நமது புகைப்படங்கள் மற்றவர்களுக்கு புரிய வைத்துவிடும்.

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில், புகைப்படங்களை கம்ப்யூட்டரிலும், செல்போன்களிலும் வைத்துக் கொள்வது வழக்கமாகவிட்டாலும் , அவற்றை பிரிண்ட் போட்டு அதை வீட்டு சுவற்றில் மாட்டுவதோ அல்லது அலமாறியிலோ வைத்து, மற்றவர்கள் அந்த புகைப்படம் குறித்து நம்மிடையே விசாரித்தால், நமக்கு கூடுதல் சந்தோஷம் கிடைப்பதை யாராலும் மறுக்க முடியாது.

இந்த அவசர காலக்கட்டத்தில் புகைப்படம் எடுக்க பல்வேறு வசதிகளை மக்கள் தங்கள் உள்ளங்கையில் வைத்திருந்தாலும், அந்த புகைப்படத்தை பிரிண்ட் போடுவதை தவர விட்டு விடுகிறார்கள். காரணம், இந்த ஒரு புகைப்படத்திற்காக, ஸ்டுடியோவை அனுகி, அவர்கள் கேட்கும் பெரும் தொகையை கொடுக்க அவர்கள் விரும்புவதில்லை.

ஆனால், இனி அத்தகைய கவலைய விட்டுட்டு, நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை பிரிண்ட் போட்டு ரசிக்கலாம், அதுவும் முழுக்க முழுக்க இலவசமாக.

ஆம், www.anytimephoto.in என்ற இணையத்திற்கு சென்று, நீங்கள் எந்த புகைப்படத்தை பிரிண்ட் போட நினைக்கிறீர்களோ அந்த புகைப்படத்தை அந்த இணையத்தில் அப்லோட் செய்துவிட்டு, உங்களது முகவரி மற்றும் இ-மெயில் முகவரியை கொடுத்தால் போதும், அந்த புகைப்படம் உங்களது முகவரிக்கு பிரிண்டாக வரும். இவை அனைத்தும் முழுக்க முழுக்க இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரொம்ப எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்ட இந்த இணையதளத்தில், 4 வழிகளை கடைபிடித்து உங்களது புகைப்படத்தை பிரிண்டாக பெறலாம். நீங்கள் உங்களது புகைப்படத்தை அப்லோட் செய்த 7 வது நாளில், உங்கள் முகவரிக்கு கொரியர் மூலமாக அந்த புகைப்படம் பிரிண்டாக வரும்.

தற்போது சென்னையில் மட்டும் இந்த இலவச புகைப்பட பிரிண்ட் சேவையை தொடங்கியுள்ள www.anytimephoto.in நிறுவனம் விரைவில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தொடங்க உள்ளது.

Leave A Reply