மார்க்கெட் கொஞ்சம் டல்லு தான்… – அதற்காக இப்படியொரு அதிரடி முடிவை எடுக்கணுமா ஆர்யா?

0

மிழ்சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா.

எந்த நடிகையாக இருந்தாலும் படப்பிடிப்பில் அவர்களை நன்றாகப் பார்த்துக் கொள்வார் என்று சம்பந்தப்பட்ட நடிகைகளே சர்ட்டிபிகேட் கொடுக்கும் அளவுக்கு ப்ளேபாய் என்றும் பெயர் எடுத்தவர்.

அப்படிப்பட்டவருக்கு கடம்பன் உட்பட இறுதியாக வந்த சில படங்கள் படு தோல்விப் படங்களாக அமைந்தது. அதோடு சொந்தப்படத் தயாரிப்பிலும் இறங்கி நஷ்டம் ஏற்பட்டதால் புதுப்பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்தார்.

இதனையடுத்து தனது சம்பளத்தை கணிசமாகக் குறைந்து தற்போது கஜினிகாந்த் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இனியும் சினிமாவை நம்பி மட்டுமே இருந்தால் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காது என்று யோசித்தவர் சின்னத்திரையிலும் தலை காட்டுவது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு தன்னை திருமணம் செய்து கொள்ள ஆர்வமுள்ள பெண்கள் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆர்யா சொல்வது உண்மை என்று நம்பி பல பெண்கள் அந்த நம்பரைத் தொடர்பு கொண்டு விபரங்களை தெரிவித்தனர்.

ஆனால் அது ஆர்யாவின் நிஜ திருமணம் சம்பந்தப்பட்ட வீடியோ அல்ல என்பதும், அது கலர்ஸ் டிவியின் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகப் போகும் ”எங்க வீட்டு மாப்பிள்ளை” என்ற புத்தம் புதிய ஷோ சம்பந்தப்பட்ட விளம்பரம் என்கிற விபரமும் தெரிய வந்தது. சுமார் 16 பெண்களை இந்த ஷோவில் நடிப்பதற்காக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதில் தான் ஹீரோவாக நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறாராம் ஆர்யா. இந்த மாதம் 20 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இந்த ஷோ கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாக இருக்கிறது.

பெரிய திரையில் வாய்ப்புகள் குறையலாம், அதுக்காக இப்பவே சின்னத்திரை பக்கம் வரணுமா ஆர்யா என்பது தான் அவருடைய ரசிகர்களின் கேள்வியாகவும், கவலையாகவும் இருக்கிறது.

Leave A Reply