ஆர்யாவை கல்யாணம் செஞ்சுக்க விருப்பமா? – உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…

0

arya

யன்தாரா, அனுஷ்கா, அமலாபால் என படங்களில் கூட சேர்ந்து நடித்த எல்லா நடிகைகளுடனும் இணைந்து கிசுகிசுக்கப்பட்டவர் நடிகர் ஆர்யா.

கோடம்பாக்கத்தில் ‘ப்ளே பாய்’ என்று திரையுலகினரால் கடுப்போடு அழைக்கப்படும் ஆர்யா நான் கல்யாணம் பண்ணப் போறேன்… பொண்ணு வேணும் குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

என்னது ப்ளே பாய் ஆர்யாவுக்கா இப்படியொரு நிலைமை? என்று பரிதாப்படுகிறார்கள் அந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள்.

அந்த வகையில் அந்த வீடியோவில் ஆர்யா கூறியிருப்பதாவது, “போன வாரம் ஜிம்ல நான் கல்யாணம் பண்ணிக்கப் போறதா பேசிக்கிட்டு இருந்த விஷயம், வீடியோவா லீக் ஆகிடுச்சு. அது எனக்குத் தெரியாம என் ஃபிரெண்ட்ஸ் விளையாட்டுத்தனமா பண்ண ஒரு விஷயம். ஆனால், அதுல பேசுன எல்லா விஷயங்களும் உண்மைதான். கல்யாணத்துக்காக பொண்ணு தேடிக்கிட்டு இருக்கேன்.

பொதுவா எல்லாருமே அவங்க லைஃப் பார்ட்னரை, அவங்க வேலை செய்ற இடம், நண்பர்கள், குடும்பத்தினர், உறவினர்கள் மூலம் தேடுவாங்க. இல்லேன்னா மேட்ரிமோனியல் இணையதளங்கள்ல தேடிப்பாங்க. ஆனா, நான் அப்படி இல்லைங்க. எனக்குப் பெரிய டிமாண்ட்ஸோ, கண்டிஷன்ஸோ எதுவும் கிடையாது.

உங்களுக்கு என்னைப் பிடிச்சிருந்தா, நான் உங்களுக்கு நல்ல லைஃப் பார்ட்னரா இருப்பேன்னு நீங்க நினைச்சீங்கன்னா, 7330173301 என்ற நம்பருக்கு கால் பண்ணுங்க. இது ஏமாத்துறதுன்னோ, விளையாட்டுத்தனமா பண்றேன்னோ நினைச்சிக்காதீங்க. இது என்னுடைய லைஃப் மேட்டர். இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க, உங்க அழைப்புக்காக காத்திருக்கேன்” இவ்வாறு ஆர்யா பேசியிருக்கிறார்.

அமீர் இயக்கத்தில் ‘சந்தனத்தேவன்’ சுந்தர்.சி இயக்கும் ‘சங்கமித்ரா’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஆர்யா.

Leave A Reply

Your email address will not be published.