தொடர் தோல்வி எதிரொலி – ‘செக்ஸ் காமெடி’ இயக்குனரோடு கை கோர்த்த ஆர்யா!

0

arya

‘இது யார்யா..? என்று ரசிகர்கள் ஞாபகப்படுத்திக் கொள்ளக் கூடிய அளவுக்கு கலவரமாகிக் கிடக்கிறது நடிகர் ஆர்யாவின் மார்க்கெட் நிலவரம்.

சொந்தப் படங்களை எடுத்து கடனாளியானது மிச்சம் என்கிற கவலை ஒரு பக்கம், தொடர் தோல்விப்படங்களைக் கொடுத்ததால் புதுப்படங்கள் அமையாமல் போனது மறுபக்கம் என நொந்து போயிருந்தவர் தற்போது புதிதாக ஒரு படத்தில் தர லோக்கல் ஹீரோ ரேஞ்சில் இறங்கி நடிக்க சம்மதித்திருக்கிறார்.

அடல்ட் காமெடி என்கிற டேக்லைனோடு ரிலீசான ‘ஹரஹர மஹாதேவகி’ இயக்குனர் சந்தோஷ் இயக்கப் போகும் புதுப்படம் கஜினிகாந்த்.

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தில் ஹீரோவாக நடிக்க சம்மதித்திருக்கிறார் ஆர்யா. இதில் வனமகன் படத்தில் நாயகியாக அறிமுகமான சாயிஷா கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.

முழுக்க முழுக்க காமெடிப் படமாக தயாராக இருக்கும் இப்படத்தில் ஒரு புதுமுகத்தைக் கூட ஹீரோவாகப் போட்டு எடுக்கலாம்.

ஆர்யாவின் மார்க்கெட் கண்டிஷனும் அந்த நிலையில் தான் இருப்பதால் கம்பெனி கொடுத்த சம்பளத்தை வாங்கிக் கொண்டு கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

தற்போது கௌதம் கார்த்திக் நடிப்பில் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தை இயக்கி வரும் சந்தோஷ் அந்தப் படத்தை முடித்த கையோடு இந்தப் படத்தை இயக்குகிறார்.

Leave A Reply