அவள் – விமர்சனம்

0

Aval

RATING : 3/5

நட்சத்திரங்கள் – சித்தார்த், ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி, அனிஷா, சுரேஷ் மற்றும் பலர்

இயக்கம் – மிலிந்த் ராவ்

சென்சார் சர்ட்டிபிகேட் – ‘A’

வகை – ஹாரர், த்ரில்லர்

கால அளவு – 2 மணி நேரம் 16 நிமிடங்கள்

தமிழ்சினிமாவில் ‘ஹாரர் காமெடி’ என்ற புதிய கேட்டகிரியை அறிமுகப்படுத்தியதன் மூலம் பேய்ப்படம் என்றால் ரசிகர்கள் பயத்தோடு பார்த்த காலம் போய் அதை காமெடிப்படமாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஆனால் பேய்ப்படம் என்றால் அது ஹாரர் ஜானராக மட்டுமே இருக்க வேண்டும். அதைப் பார்க்கும் ரசிகர்களுக்கு பயத்தைக் கொடுக்க வேண்டும் மாறாக சிரிக்க வைக்கக் கூடாது என்கிற நியாயமான நடைமுறையில் தமிழில் வெளியாகியிருக்கும் படம் தான் இந்த ‘அவள்.’

ஹிந்தியில் ‘தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர்’ என்ற பெயரிலும் தெலுங்கில் ‘குர்ஹம்’ என்ற பெயரிலும் வெளியான படம் தான் தமிழில் ‘அவள்’ ஆக மாறியிருக்கிறது.

மூளை அறுவை சிகிச்சை டாக்டரான ஹீரோ சித்தார்த் தனது மனைவி ஆண்ட்ரியாவுடன் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மலையடிவாரத்தில் வசித்து வருகிறார். அவர்களது வீட்டுக்கு எதிரில் தன் குடும்பத்தினருடன் புதிதாக குடி வருகிறார் அதுல் குல்கர்னி. குல்கர்னியின் மகளான அனிஷா அடிக்கடி தன் நிலை மறந்து மனநிலை பாதிக்கப்பட்டவர் போல வித்தியாசமாக நடந்து கொள்கிறார். இதனால் அவர் மனோதத்துவ டாக்டரான சுரேஷிடம் அழைத்து செல்லப்படுகிறார்.

அவரிடம் அடிக்கடி ஒரு உருவம் என் முன்னே தோன்றி ”இது என் வீடு, அதனால் இந்த வீட்டு வெளியே போ” என்று சீன மொழியில் எச்சரிக்கிறது என்றும், அதையொட்டி தனக்கு நடந்த அத்தனை விஷயங்களையும் அவரிடம் கூறுகிறார். அதைக் கேட்கும் சுரேஷ் இது மனோ வியாதி இல்லை. மாறாக அனிஷாவின் உடம்பில் பேய் புகுந்திருப்பதாகக் கூறுகிறார்.

உடனே மகளைக் காப்பாற்றுவதற்காக தனக்குத் தெரிந்த பாதிரியார் ஒருவரை வீட்டுக்கு கூட்டி வருகிறார் அதுல் குல்கர்னி. வீடு முழுக்க சுற்றி வரும் பாதிரியாரோ பிரச்சனைகளுக்கு காரணம் உங்கள் மகள் இல்லை, இன்னொருவர் உடம்பிலும் ஆவி ஒன்று புகுந்துள்ளது. அதுதான் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் என்கிறார்?

எதற்காக அந்த ஆவிகள் இவர்களை வீட்டை விட்டு வெளியேறச் சொல்கிறது? ஆவிகளின் பிடியிலிருந்து தன் மகளை அதுல் குல்கர்னி விடுவித்தாரா? ஆவி புகுந்த அந்த இன்னொருவர் யார்? போன்ற கேள்விகளுக்கு பதிலாக அமைவது தான் படத்தின் மீதிக்கதை.

ஒருபக்கம் சித்தார்த்தும், ஆன்ட்ரியாவும் லிப் டூப் லிப், படுக்கயறைக் காட்சிகள் என ரொமான்ஸ் காட்சிகளில் ரசிகர்களை சூடேற்ற, மறு பக்கம் தன் மகளைக் காப்பாற்றப் போராடும் ஒரு பாசமுள்ள அப்பாவாகவும், பேய், ஆவி போன்றவற்றை மூட நம்பிக்கையாக நினைப்பவராகவும் ஒரு பொறுப்பான அப்பாவாக நடிப்பில் எக்கச்சக்கமாக ஸ்கோர் செய்கிறார் அதுல் குல்கர்னி.

மாடர்ன் கேர்ளான அனிஷாவுக்கு திடீரென்று பேய் பிடிக்கவும் அவருடைய முக பாவங்கள் மாறுவதும், உடல் ரப்பர் போல எங்கேங்கோ வளைந்து நெளிவதும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அந்தக் காட்சிகள் நிஜமான திகிலைக் கூட்டும் ‘திக் திக்’ நிமிடங்கள்.

காற்றில் வீட்டின் ஜன்னல்கள் வேகமாக திறந்து மூடுவதும், கதவின் சாவித் துவாரத்தை குளோசப்பில் காட்டும், சத்தம் வருகின்ற அறையின் கதைவை பயந்து கொண்டே மெதுவாகத் திறப்பதும், படிகளில் இறங்கும் போது கால்களை குளோசப்பில் காட்டுவதும், பேய்களின் நிறைவேறாத ஆசைகளுமாக நாம் பார்த்த பல பேய்ப்படங்களில் இருக்கும் வழக்கமான பேய்ப்பட கிளிஷேக்கள் இதிலும் உண்டு.

அதையும் தாண்டி ஸ்ரேயாஷ் கிருஷ்ணாவின் பயமுறுத்துகிற ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் க்ரிஷுன் ஹார்ட் பீட்டை எகிற வைக்கிற பின்னணி இசையும் தி கான்ஜூரிங் , ‘தி எக்ஸ்சார்சிஸ்ட்’ போன்ற ஹாலிவுட் படங்களை தமிழில் பார்த்த த்ரில்லர் அனுபவத்தைத் தரும் மிலிர்ந்த் ராவ்வின் பெர்பெக்ட்டான திரைக்கதையும் ஒரு பக்காவான பேய்ப்படத்தைப் பார்த்த அனுபவத்தை முழுமையாகத் தருகிறது.

அவள் – தமிழில் ஒரு ஹாலிவுட் பாணி ஹாரர் படம்!

Leave A Reply