சொன்னதைச் செய்த மிஷ்கின்


சினிமா மீது தீராத காதல் கொண்டவர் இயக்குநர் மிஷ்கின். தனது படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனித்தன்மை மிக்க இயக்குநர்கள் வரிசையில் இவரும் இடம் பிடித்துள்ளார். இவரது படங்கள் திரைக்கல்லூரிகளில் பாடங்களாக விவாதிக்கப்பட்டும் வருகிறது. சினிமாவை நேசிக்கும் அவர் நல்ல படங்கள் வரும் போது முதல் ஆளாக பாராட்டவும் தவறுவதில்லை.

Related Posts
1 of 9

“பாரம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் “பாரம்” படம் வெளியாகும்போது நான் விளம்பரத்திற்காக தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டுவேன் எனக்கூறினார். சொன்னது போலவே அதைச் செய்தும் காட்டியுள்ளார்.

தேசிய விருதை வென்ற “பாரம்” திரைப்படம் இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசுவாமி இயக்கத்தில் 2020 பிப்ரவரி 21 அன்று வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.