Banner After Header

முதல்ல படத்தை ஆரம்பிங்க… பேமண்ட்டை அப்புறமா பேசிக்கலாம் – தயாரிப்பாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அரவிந்த்சாமி

0

‘தனி ஒருவன்’ படத்தில் கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து மீண்டும் சோலோ ஹீரோவாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார் அரவிந்த்சாமி.

அந்த வரிசையில் அவர் ஜோடியாக அமலாபால் நடிக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற பெயரில் ஹர்ஷினி மூவிஸ் தயாரிப்பில் புதுப்படம் ஒன்று தமிழில் தயாராகி வருகிறது.

பிரபல மலையாள இயக்குனர் சித்திக் இயக்கும் இப்படம் மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ‘பாஸ்கர் தி ரஸ்கல்’ படத்தின் ரீமேக் ஆகும். அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

விழாவில் நடிகர் அர்விந்த்சாமி, அமலாபால், இயக்குனர் சித்திக், ரோபோ சங்கர், ஆஃப்தாப்ஷிவ்தசானி, நடிகை மீனா மற்றும் இசையமைப்பாளர் அம்ரேஷூடன் மூத்த நடிகையும், அம்ரேஷின் அம்மாவுமான ஜெயச்சித்ரா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஹர்ஷினி பேசிய போது, “பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஒரு நல்ல எண்டர்டெய்னர் படமாக தயாராகியுள்ளது. இப்படத்திற்கு அட்வான்ஸ் தொகை வாங்காமலேயே படப்பிடிப்புக்கு வந்து அர்விந்த் சாமி இப்படத்தில் நடித்து கொடுத்தார். இயக்குனர் சித்திக் தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு திரைக்கதையில் சில மாற்றங்களை செய்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. இசையமைப்பாளர் அம்ரேஷ் கணேஷ் படத்திற்கு நன்றாக இசையமைத்துள்ளார். பாடல்களும் அருமையாக வந்துள்ளது.” என்று கூறினார்.

நடிகர் அர்விந்த் சாமி, “இயக்குனர் சித்திக்கிற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் இந்த படத்திற்காக என்னை தேர்வு செய்ததற்கு. இந்த படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு சில ரிஸ்க்குகளை எடுத்துள்ளேன். ஸ்டண்ட் மாஸ்டர் விஜயன் அவர்களின் 500 ஆவது படத்தில் நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது.

படத்தில் ரோபோ மற்றும் சூரியின் காமெடி காட்சிகள் அருமையாக வந்துள்ளது, அவர்களுடன் நானும் சேர்ந்து சிறிது காமெடிக்கு முயற்சி செய்துள்ளேன். படம் நன்றாக வந்துள்ளது உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறேன்.” என்று அவர் கூறினார்.

ஜெயச் சித்ரா பேசியபோது, “அம்ரேஷ் எனது மகன், இப்போது மூன்றாவது முறையாக இந்த பெருமைமிக்க மேடையில் நிற்க செய்துள்ளான். மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் இவரது இசை அனைவராலும் பாரட்டப்பட்டது. தற்போது இந்த மேடையில் இருந்த அறிஞர்கள் பலரும் அவரை பாராட்டியுள்ளனர், பெருமையாக உள்ளது. இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்” என்று அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.