சினிமாவில் நடித்தே தீருவேன்! : பெற்றோருடன் மல்லுக்கு நிற்கும் ‘பிக்பாஸ்’ ஜூலி

0

julie

ல்லிக்கட்டு போராட்டத்தில் ”சின்னம்மா சின்னம்மா ஓபிஎஸ்ஸை எங்கம்மா” என்று கோஷம் போட்டு பிரபலமானவர் ஜூலி. அவர் விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மொத்தமாக பெயரைக் கெடுத்துக் கொண்டார்.

பிக்பாஸ் வீட்டில் நாட்கள் செல்லச் செல்ல ஜூலியின் உண்மையான முகமும், அவருடைய குடும்பப் பின்னணி பற்றியும், சின்னத்திரை மற்றும் சினிமாவில் நடிப்பதற்காக அவர் செய்த பித்தலாட்டங்களும், நான் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவள் என்று பொய் சொன்னதும் பிக்பாஸ் ரசிகர்களுக்கு பெரும் கோபத்தைக் கொடுத்தது.

இதனால் இன்றுவரை அவரை எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் ஓட ஓட விரட்டிக் கொண்டிருக்கிறார்கள். என்ன தான் ரசிகர்கள் அவரை விரட்டி விட்டாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் கிடைத்த பாப்புலாரிட்டியை வைத்து சின்னத்திரையிலும், சினிமாவிலும் முகம் காட்டத் தயாராகி வருகிறார்.

அதற்கேற்றாற் போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தனக்கு படங்களில் நடிக்க ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாக சமீபத்தில் பேசியிருந்தார் ஜூலி.

அவர் ஆசைப்பட்டாலும் அவருடைய அந்த நடிப்பாசைக்கு அவருடைய குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால் நான் சினிமா படங்களில் நடித்தே தீருவேன் என்று பெற்றோரிடம் மல்லுக்கு நிற்கும் ஜூலி அதற்காக வீட்டை விட்டு வெளியேறவும் தயங்க மாட்டேன் என்று எச்சரித்திருக்கிறாராம். இதனால் அவருக்கும், பெற்றோருக்கும் இடையே கடந்த சில வாரங்களாகவே பெரும் பிரச்சனையாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக நான் தளபதி விஜய் ரசிகை. ஆனால் தல அஜீத்துடன் சேர்ந்து படத்தில் நடிக்க ஆசையாக உள்ளது என்று ஒரு மீடியாவில் பேட்டியளித்த ஜூலியை தல, தளபதி இருவருடைய ரசிகர்களும் செம கலாய் கலாய்த்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply