காக்கிச் சட்டைக்கு கெளரவம் சேர்க்கப் போகும் ஜெயம்ரவி!

0

Jayam-Ravi

பிரபுதேவா ஸ்டுடியோஸ் பட நிறுவனம் வித்தியாசமான கதைக்களம், திறமையான கலைஞர்கள், நட்சத்திரங்களை வைத்து பல பிரமாண்டமான படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.

அந்த வரிசையில் ரோமியோ ஜூலியட் யூனிட்டான ஜெயம்ரவி, ஹன்சிகா, டைரக்டர் லக்ஷ்மன், இமான், வி.டி.வி.கணேஷ் கூட்டணியில் ”போகன்” படத்தையும் மிகப் பிரமாண்டமாகத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.

கதாநாயகனாக நடிக்கும் ஜெயம்ரவி ஹீரோவாகவும், வில்லனாகவும் நடிக்கிறார். அதேபோல அரவிந்த்சாமியும் இதில் ஹீரோ – வில்லன் என இரு வேறு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரே வேடம் தான் ஆனால் இரு வேறு குணாதிசுயங்களை வெளிக்கொணரும் வேடங்கள் இருவருக்கும். நாயகியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். மற்றும் வி.டி.வி.கணேஷ், ஆடுகளம் நரேன், அஸ்வின், நாகேந்திரபிரசாத் ஆகியோர் நடிக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குநரிடம் லஷ்மணிடம் கேட்டோம்…

ரோமியோ ஜூலியட் ஜாலியான காதல் கதையாக இருந்தது. ஆனால் போகன் அப்படி இல்லை. இது பரபரப்பான ஆக்‌ஷன் த்ரில்லராக வேறு மாதிரியான உணர்வை ஏற்படுத்தும். இதிலும் மெலிதான காமெடி படம் முழுவதும் இருக்கும். காக்கி சட்டைக்கு கௌரவம் சேர்க்கும் படமாக இது இருக்கும். படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார் இயக்குநர் லக்ஷ்மண்.

Leave A Reply

Your email address will not be published.