Banner After Header

கலைஞர் கருணாநிதி மறைவு – திரையுலக பிரபலங்கள் இரங்கல்

0

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

ரஜினிகாந்த்

என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள்.

அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்

சிவகார்த்திகேயன்

ஓய்வில்லாமல் உழைத்த சூரியன் உறங்கப் போகிறது.. ஐயா உங்கள் கதிர்வீச்சுகள் தமிழும், கலையும், இலக்கியமும், அரசியலும் இருக்கும் வரை பிரகாசித்துக்கொண்டே இருக்கும்.

தனுஷ்

வஞ்சிக்கப்பட்ட தமிழனை,சுயமரியாதை சூரியனால் சுட்டெரித்து புடம் போட்ட தங்கமாக மாற்றிய கலைச்சூரியனே!

பராசக்தி மூலமாக அரசியல் அறியவைத்து , எங்களைப்போன்ற பாமர்களுக்கும் திரைத்துறையின் கதவை எட்டி உதைத்து திறந்து வைத்த கலைஞரே!
உங்களை கண்ணீரோடு வழியனுப்பி வணங்குகின்றோம்!

குஷ்பு

நான் அனாதையானது போன்று உணர்கிறேன்

இசையமைப்பாளர் – நடிகர் ஜி. வி. பிரகாஷ்

கற்பனையில் மட்டுமே சாத்தியப்பட்டதை தன் வாழ்வில் நிகழ்த்தி காட்டிய அரசியல் பெரும் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு.

நடிகர், இயக்குனர் சேரன்

கலைஞர் பராசக்தியில் புரட்டிப்போட்ட தமிழ்சினிமாவில்தான் இன்னும் நாங்கள் இளைப்பாறிக்கொண்டிருக்கிறோம்… இச்சமூக மாற்றத்தில் முக்கிய பங்களித்த அய்யா அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்.

நடிகை கஸ்தூரி

உதய சூரியன் அஸ்தமித்தது. உன் முகம் காண குடுத்துவைக்கவில்லை. அந்நிய நாட்டிலிருந்து அஞ்சலி.

இயக்குனர் ராம்

அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ் நிலப்பரப்பை, தமிழர் மனதை, தமிழ்த் தேசத்து அரசியலைத் தன் குரலாலும் தமிழாலும் பகுத்தறிவாலும் தீர்மானித்த நிர்மாணித்த அபூர்வமான ஒரு வரலாற்று நாயகன் கலைஞர். அவர் எப்படி காலமாக முடியும்? வரலாறு இருக்கும் வரை அவரும் இருப்பார். சூரியனுக்கு தமிழ் வணக்கங்கள்.

நடிகர் விஷால்

Deeply saddened 2 hear dat our iconic leader #KalaignarKarunanidhi ayya is no more An irreplaceable leader.nobody cn match his contribution n politics and My deepest condolences 2 his family n his RIP. i request Tn govt 2 allot marina beach

நடிகை ரம்யா கிருஷ்ணன்

A person that departs from this earth never truly leaves, for they are still alive in our hearts, through us, they live on. My condolences. #RIPKalaingr

நடிகர், இயக்குனர் சசிகுமார்

#RIPKalaignar Great leader and tamil writer #karunanidhi ayya ! Will be remembered forever..

நடிகை வரலட்சுமி சரத்குமார்

A one man army..Fighter.. Writer..Politician..A man with many faces..75 years…No man can achieve what he did..I’m sure even after this he will continue to live on in all our hearts…#Respect #Karunanidhi #RIP sir.. strength to his family..A true #Leader in very way..

இசையமைப்பாளர் அனிருத்

End of a legendary era. Heartfelt condolences. #RIPKalaignar

நடிகர் ஜெயம் ரவி

The end of greatness Pride of Tamilnadu! My heartfelt condolences to the entire family. RIP Ayya

நடிகர் சதீஷ்

கலைஞர் காலமானார்…. இல்லை அவர் இருந்தவரை தமிழுக்கும் தமிழர்க்கும் “பொற்காலமானார்” #சொர்க்கம் இனி தமிழ் பயிலும்

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா

#TamilNadu has lost a great leader of our times. We people and Our #Tamil language will miss #Kalaignar #Karunanidhi my deepest condolences to the entire family members.

இயக்குனர் கார்த்திக் நரேன்

கலைதுறையும் இந்த நாடும் தங்களை என்றென்றும் நினைவில் வைத்திருக்கும் அய்யா. ஆழ்ந்த இரங்கல்.

நடிகர் அதர்வா

Deeply Saddened to hear about the fall of such a great leader, who fought every battle till the very End. May his soul rest in Peace and all strength to his family.

இயக்குனர் வெங்கட் பிரபு

அவரின் தமிழ் பற்றுக்கு நிகர் அவர் மட்டுமே. என்றும் நம் மனதில் அஸ்தமிக்காத சூரியன்.

இசையமைப்பாளர், பாடகர் கங்கை அமரன் – தென்பாண்டித் தமிழே! என் சிங்காரக் குயிலே! இசைபாடும் காவியம்!. இது ரவிவர்மாவின் ஓவியம்! பாசமென்னும் காவியம்! உனைப் பாடவேண்டும் பாயிரம்!

இவர்களைத் தவிர இன்னும் திரையுலகினர் பலரும் கலைஞரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.