அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு கலக்கும் ‘செக்கக் சிவந்த வானம்’

0

‘காற்று வெளியிடை’ படத்தைத் தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்கள் ஒன்றிணையும் மல்ட் ஸ்டார் படம் ஒன்றை மணிரத்னம் இயக்கப் போகிறார் என்ற செய்தி பல மாதங்களுக்கு முன்பே வெளியானது.

காற்று வாக்கில் உலாவந்த அந்த செய்தி தற்போது உறுதியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கும் இந்த புதுப்படத்துக்கு செக்கச் சிவந்த வானம் என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், சுபாஸ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் அரவிந்த்சாமி, சிலம்பரசன், விஜய்சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. முன்னதாக அருண் விஜய் நடிக்க வேண்டிய கேரக்டரில் துல்கர் சல்மான் தான் நடிக்கப் போகிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அவரிடம் கால்ஷீட் இல்லாததால் அவருக்குப் பதில் அருண் விஜய்யை டிக் செய்திருக்கிறார் மணிரத்னம். அதேபோல அதிதி ராவ் ஹைதரியும் இப்படத்தில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிறார்.

படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதுகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிப்படமாக தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 12ம் தேதி முதல் துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.

Leave A Reply