‘சென்னை 2 சிங்கப்பூர்’ : செம ஜாலியா ஒரு ரோடு டிராவல் படம்

0

chennai-2-singapore1

விஜய் ஆண்டனியும், ஜி.வி.பிரகாஷும் ஹீரோவாகி விட்டார்கள். அந்த வட்டத்துக்குள் வராமல் தயாரிப்பாளராக அவதாரமெடுத்திருக்கிறார் பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான்.

எல்லாம் என்னோட நண்பனுக்காகத்தான், ஒரு தேரை இழுக்கணும், சரி சேர்ந்து இழுப்போமேன்னு இசையமைப்பாளராக மட்டுமில்லாமல், தயாரிப்பாளராகவும் ஆகி விட்டேன். அது எனக்கு சந்தோஷம் தான் என்கிற ஜிப்ரான் அப்பாஸ் இயக்கத்தில் கோகுல் ஆனந்த் மற்றும் அஞ்சு குரியன் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தில் தான் அந்தப் புரமோஷனைப் பெற்றிருக்கிறார்.

”இந்தப் படத்தை முழுக்க முழுக்க ஒரு சிங்கப்பூர்ல தயாராகிற தமிழ்ப்படமாகவே இயக்க நினைத்தேன். அது சம்பந்தமா சென்னையில இருக்கிற ஜிப்ரானை மீட் பண்ணி பேசினேன். அவர் தான் இது பழைய ‘கதாநாயகன்’ படம் மாதிரி நல்ல ஜாலியான, காமெடிப்படமா மனசு விட்டுச் சிரிக்கிற மாதிரி இருக்கு. அதனால தமிழ்நாட்டு ரசிகர்களுக்கான படமாகவும் எடுன்னு ஐடியா கொடுத்தார்.

சரின்னு முடிவு பண்ணி சிங்கப்பூருக்கே கெளம்பலாம்னு நெனைச்சா என்னோட பாஸ்போர்ட் தொலைஞ்சுப் போச்சு, மறுபடியும் அது கிடைக்கிறதுக்கு ரெண்டு மாசம் ஆகும்னு சொன்னாங்க. அந்தக் கேப்புல படத்தை தமிழ்நாட்டுலேயே முடிச்சிட்டேன். இப்போ இது ஒரு நல்ல ஜாலியான முழு நீள தமிழ்ப்படமா தயாராகிடுச்சு.

உண்மையிலேயே அப்பாஸ் எடுத்த படம் காமெடியா, ஜாலியா இருக்கா? அந்த சந்தேகம் ஜிப்ரானுக்கும் வர அதை டெஸ்ட் பண்ணிப் பார்த்து விடுவது என்று சென்னையில் இருக்கிற சில கல்லூரி மாணவர்களுக்கு படத்தை போட்டுக் காண்பித்திருக்கிறார்கள்.

அவர்கள் கொடுத்த ரிசல்ட் ஜிப்ரான் உள்ளிட்ட படக்குழுவினருக்கு பெருத்த நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது, ஆமாம் நாங்க எங்கெல்லாம சிரிச்சோமோ? அங்கெல்லாம் படம் பார்த்த ரசிகர்களும் சிரிச்சாங்க.. ஆக எங்களோட கணிப்பு தப்பாகல… என்று சொல்லும் ஜிப்ரான் இது சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு டிராவல் ஆகும் ஒரு ஹீரோவைப் பத்தின கதை. அப்படி போகிற இடங்களில் எல்லாம் அவருக்கு என்னென்ன அனுபவங்கள் ஏற்படுகின்றன? அதையெல்லாம் அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதைத்தான் செம ஜாலியான டிராவல் படமாக எடுத்திருக்கிறோம் என்றார்.

அதோடு படத்தின் ஆடியோவையும் அதே டிராவல் டைப்பில் வெளியிட்டாராம் ஜிப்ரான். ஆறு பாடல்களையும், ஆறு நாடுகளில் அதுவும் சாலை வழியே சென்று வெளியிட திட்டமிட்டோம். ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஆரம்பித்த எங்கள் இசைப்பயணம் சென்னையில் ஆரம்பித்து பூட்டான், மியன்மார், தாய்லாந்து, மலேஷியா ஆகிய நாடுகளில் பயணம் செய்து இறுதியாக சிங்கப்பூரில் நிறைவடைந்தது. அந்தப் பயணம் படத்தின் பப்ளிசிட்டிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. இன்றைக்கும் எங்கள் படத்தைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது என்றார்.

படத்தைப் பார்க்கிறப்போ கண்டிப்பா பார்க்கிறவங்களோட மனசு ரிலாக்ஸ்ட்டா இருக்கும், ஒரு ஜாலியான படத்தைப் பார்த்த திருப்தி கிடைக்கும், எந்த இடத்திலும் கருத்து மட்டும் சொல்லவே இல்லை என்கிறார் டைரக்டர் அப்பாஸ் அக்பர்.

படப்பிடிப்பு, தொழில்நுட்ப வேலைகளை எல்லாம் முடிந்ததையடுத்து படம் வருகிற செப்டம்பர் மாதம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

Leave A Reply