Banner After Header

வந்தது மழை வெள்ளம், இனி வருவது இசை வெள்ளம்!

0

lakshman Shruthiபாரதநாட்டின் அருங்கலைகளில் தென்னிந்தியாவின் “கர்நாடக சங்கீதம்” முக்கியமானதும் முதன்மையானதும் ஆகும் என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.

அவ்வரிய கர்நாடக சங்கீதத்திற்கென்று அனைத்து தரப்பு ரசிகர்களுடன் இளம் தலைமுறையினரும் ஆவலோடு கலந்து கொள்ளக்கூடிய வகையில் புதிய பரிமாணத்தில் கடந்த பத்து வருடங்களாக “சென்னையில் திருவையாறு” என்கிற விழாவினை “லஷ்மன் ஸ்ருதி இசையகம்” (Lakshman Sruthi Musicals) வெகு விமரிசையாக நடத்தி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டின் நிறைவிலும் சென்னை மாநகரத்தில் நிகழக்கூடிய தரமான, அழகான, முழுமையான இசை விழாவாகவும், சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகவும் “சென்னையில் திருவையாறு” விழா திகழ்கிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு இவ்வினிய விழா வருகிற டிசம்பர் 18ஆம் தேதி பிற்பகல்12.05 மணிக்கு “வியாசை கோதண்டராமன்” அவர்களின் நாதஸ்வர இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. சரியாக மாலை 5.00 மணிக்கு ”சென்னையில் திருவையாறு” சங்கீத வைபவத்தின் துவக்க விழாவினை நடிகர் பிரபுதேவா துவக்கி வைக்கின்றார்.

டிசம்பர் 18 ஆம் தேதி மதியம் 2.50 மணிக்கு கர்நாடக சங்கீத கலைஞர்களில் மூத்தவரும் பல்வேறு சிறப்புகளும் பெற்றவருமான மரியாதைக்குரிய “பத்மபூஷண்” பி.எஸ்.நாராயணசாமி” அவர்களின் தலைமையில் ஒரே மேடையில் 500 க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் ”பஞ்சரத்ன கீர்த்தனைகளை” ஒன்றாகச் சேர்ந்து பாடுகின்றனர். பெரியவர், சிறியவர் என்ற வயது பேதமின்றி, புகழ்பெற்ற மற்றும் வளர்ந்து வரும் இளைய தலைமுறையினரும், ஆண், பெண் வித்தியாசமின்றி அனைத்து கர்நாடக சங்கீத இசைக்கலைஞர்களும் தங்கள் இசைக்கருவிகள் சகிதம் ஒன்றிணைந்து பாடி, தஞ்சை திருவையாறு ஆராதனை விழாவை கண் முன்னே கொண்டு வர உள்ளார்கள்.

அனைத்து நிகழ்ச்சிகளையும் காண்பதற்கென தொடர் அனுமதிச் சீட்டும் (Season Ticket) தனித்தனியாக தேர்ந்தெடுத்து நிகழ்ச்சிகளைக் காண்பதற்கான தனியாக ஒரு அனுமதிச் சீட்டும்(Individual Show Ticket)ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மொத்தமாக நுழைவுச்சீட்டுகள் (BulkBooking) வாங்குவோருக்கும், பொதுசேவை நிறுவனங்கள், கலைமன்றங்கள், கல்வி அமைப்புகள் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும்.

ரசிகர்களின் வசதிக்காக அனுமதி சீட்டுகள் காமராஜர் அரங்கம் – தேனாம்பேட்டை, லஷ்மன்ஸ்ருதி மியூசிக்கல்ஸ் – வடபழநி, எம்6 ஈவண்ட்ஸ் – சி.ஐ.டிநகர் நந்திசிலை அருகில், நாயுடுஹால் – அண்ணாநகர், திநகர், புரசைவாக்கம், சத்யா – மேற்குமாம்பலம், திருவான்மியூர் ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்படஉள்ளது.

இணையதளம் மூலமாக (Online Ticket Booking) டிக்கெட் முன்பதிவு செய்யவும் கீழ்க்கண்ட இணையதளங்கள் மூலம் டிக்கெட்டுகளைப் பெறவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

www.lakshmansruthi.com, www.vikatan.com, www.bookmyshow.com, www.ticketnew.com, www.eventjini.com, www.indianstage.com, www.meraevents.com

”சென்னையில் திருவையாறு”நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் அறியவும், டிக்கெட்டுகள் வாங்கவும் ஆண்ட்ராய்டு ஆப்ஸ் மூலமாக பெறும் வசதியை ஏற்படுத்தியுள்ளோம். CT APPS என்ற இந்த ஆண்ட்ராய்டு ஆப்ஸ் வசதியை டிக்கெட்நியூ.காம் இசை ரசிகர்களுக்காக பிரத்யேகமாக வழங்குகிறது.

டிக்கெட் விவரங்களை தொலைபேசி மூலம் தெரிந்து கொள்ள : 044-44412345,044-428 67778,9841907711,9941922322,88070 44521 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.