ஃபஹத் ஃபாசிலின் சியூ ஸூன் திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது

மஹேஷ் நாராயணன் இயக்கத்தில், ஃபஹத் ஃபாசில், ரோஷன் மாத்யூ, தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

செப்டம்பர் 1, 2020 அன்று, சர்வதேச அளவில் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில், சியூ ஸூன் வெளியாகவுள்ளது.
புத்தம் புதிய, பிரத்யேக திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட் அப் காமெடி, அமேசான் அசல் தயாரிப்புகள், அமேசான் ப்ரைம் மியூஸிக் மூலம் விளம்பரமில்லை இசை, பல்வேறு வகையான பொருட்களின் வேகமான, இலவச டெலிவரி, முன்னதாகவே கிடைக்கும் அட்டகாசமான தள்ளுபடிகள், ப்ரைம் ரீடிங்கோட அளவில்லா வாசிப்பு மற்றும் ப்ரைம் கேமிங்கோடு மொபைலில் விளையாட்டு என அனைத்தும் மாதம் வெறும் ரூ.129க்கு தரும் அமேசான் ப்ரைம், கொடுக்கும் பணத்துக்கு பெரும் மதிப்பைத் தருகிறது.

அதிதி ராவ் ஹைதரி, ஜெயசூர்யா நடிப்பில் சூஃபியும் சுஜாதையும் திரைப்படத்தின் வெற்றிகரமான உலகளாவிய வெளியீடுக்குப் பிறகு, சியூ ஸூன் மலையாளத் திரைப்படத்தின் உலகளாவிய வெளியீடை அமேசான் ப்ரைம் வீடியோ இன்று அறிவித்துள்ளது.
மஹேஷ் நாராயண் (டேக் ஆஃப்) இயக்கி, படத்தொகுப்பு செய்திருக்கும் இது, ஒரு பரபரப்பான கதையம்சம் உள்ள படம். இதில் சூப்பர் ஸ்டார் ஃபஹத் ஃபாஸில் (டேக் ஆஃப், கும்பளாங்கி நைட்ஸ்), ரோஷன் மேத்யூ (கூடே, தி எல்டர் ஒன்), தர்ஷனா ராஜேந்திரன் (கவண், வைரஸ்) ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளரை, அவரது குடும்பம், துபாயிலிருக்கும் அவரது உறவினரின் மனைவியைத் தேடும் வேலையைக் கொடுக்கிறது. அந்த மனைவியோ தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ஒரு காணொலிக் குறிப்பைப் பகிர்ந்து விட்டு மாயமாகியுள்ளார். ஊரடங்கின் போது கட்டுப்படுத்தப்பட்ட ஒரு சூழலில் மொபைல் ஃபோனில் படம் பிடிக்கப்பட்ட திரைப்படம் என்ற தனித்துவச் சிறப்பு இந்தப் படத்துக்கு உள்ளது. செப்டம்பர் 1 முதல், அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில், இந்தியா மற்றும் 200 தேசங்களில் இருக்கும் ப்ரைம் உறுப்பினர்கள் இந்தப் படத்தை ஸ்ட்ரீம் செய்து பார்க்கலாம். “பல்வேறு மொழிகளில், தனித்துவமான வகையில் புத்தம் புதிய பொழுதுபோக்கை வாடிக்கையாளர்களுக்குத் தர வேண்டும் என நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். சூஃபியும் சுஜாதையும், ட்ரான்ஸ், லூஸிஃபர் மற்றும் கும்பளாங்கி நைட்ஸ் உள்ளிட்ட படங்களின் வெளியீட்டோடு நாங்கள் பெரும் வெற்றியை ருசித்திருக்கிறோம்.

ஃபஹத் ஃபாசில் என்றாலே சுவாரசியமான திரைப்படங்களில் நடிப்பவர். ஒரு பரீட்சார்த்த முயற்சியாக அவர் இயக்குநர் மஹேஷ் நாராயணுடன் இணைந்து எடுத்திருக்கும் திரைப்படம் கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று. இன்னும் சில நாட்களில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், சியூ ஸூன் வெளியீட்டோடு சேர்த்து இந்த பண்டிகை காலத்துக்கு இன்னும் கொஞ்சம் இனிமையைச் சேர்ப்போம் என நம்புகிறோம்” என்கிறார் அமேசான் ப்ரைம் வீடியோ இந்தியா பிரிவின், இயக்குநர் மற்றும் தலைவர் (content) விஜய் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.