Banner After Header

நாய் நம்மைவிட குறைவா? – வரலெட்சுமி

0

கொரோனா ஊரடங்கு காரணமாக அடுத்து அதிரடியாக ஓடிடியில் களம் இறங்கும் படம் டேனி. தினேஷ்மோகன் இயக்கியுள்ள இப்படத்தை இயக்குநர் பி.ஜி முத்தையா தீபா ஆகியோர் தயாரித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி இப்படம் ZEE-5 தளத்தில் வெளியாக இருக்கிறது. இப்படம் பற்றி நாயகி வரலெட்சுமி சரத்குமார் பேசும்போது, “நாய் என்ன நம்மைவிட குறைவா…? அந்த டேனி என்கிற நாய்தான் இந்தப் படத்தின் ஹீரோ. இதில் நான் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளேன். நான் எந்தக் கதாபாத்திரத்துக்கும் யாரிடமும் கற்றுக்கொள்வதில்லை. இந்தப் படத்தில் காவல்துறை உடையணிந்தவுடன், இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதற்கு ஏற்றார் போல் நடித்துள்ளேன்.

கதை ரொம்ப அழகாக இருந்தது. ஒரு கொலை நடக்கிறது, அதை எப்படி ஒவ்வொரு கட்டமாக தாண்டி கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் இ்ந்தப் படத்தின் கதை. தேவையில்லாமல் ஒரு காட்சிகூட படத்தில் இருக்காது.

நாய்க் குட்டியுடன் நடித்ததுதான் இந்தப் படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த விஷயம். படப்பிடிப்பு தளத்தில் நாயைப் பார்த்தவுடன் முதலில் போய் கட்டிப் பிடித்துவிட்டேன். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்குப் போனதிலிருந்து டேனி எப்போது வருகிறது என்றுதான் கேட்டுக் கொண்டே இருந்தேன்.

தன்னுடைய காட்சிகளுக்குப் பிறகு அழகாக போய் அதன் இருக்கையில் அமர்ந்து கொள்ளும். நமக்கு இது கேமரா, படப்பிடிப்பு என்றெல்லாம் புரியும். ஆனால், டேனியோ பல டேக்குகள் வாங்காமல் ட்ரெய்னர் என்ன சொல்றாரோ அதை சரியாக செய்து கொடுத்தது…” என்று மிகவும் ஆச்சரியத்துடன் பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.