தர்பார்- விமர்சனம்

RATING : 3/5

ஆதிக்கம் செலுத்தும் கொக்கைன் கும்பலை வேரறுக்கும் ஆதித்ய அருணாச்சலத்தின் தாண்டாவம் தான் இந்தத் தர்பார். பேட்ட ரஜினியிசத்திற்கு சற்றும் குறைவில்லாமல் சுற்றி அடித்திருக்கிறார் ரஜினிகாந்த். ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் என்பதை ரஜினியின் ஸ்டைல் சீக்வென்ஸ் போலவே, அவரின் காமெடி சீக்வென்ஸும் உறுதிப்படுத்துகிறது. ரஜினி யோகிபாபு காம்போ பக்காவாக ஒர்க்கவுட்டாகி இருப்பது ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட். யோகியின் கவுண்டர்கள் ரஜினியையே பல இடத்தில் பதம் பார்த்தாலும் எல்லாமே குபீர் ரகம்.

Related Posts
1 of 51

எல்லா நடிகர்களையும் ரஜினியே தூக்கிச் சாப்பிட்டு விடுவதால் வில்லன்கள் பெரிதாக சோபிக்கவில்லை. நயன்தாரா அழகுப் பதுமையாக வருகிறார். படத்தில் அவரை பொம்மை போல தான் பயன் படுத்திருக்கிறார்கள். ரஜினியின் மகளாக வரும் நிவேதா தாமஸ் சில இடங்களில் கண்களை குளமாக்கி நாயகி அந்தஸ்க்கு உயர்ந்து விடுகிறார். படத்தின் மற்றொரு அதிரடி ஆக்சிஷன் அனிருத்தின் பின்னணி இசை. தெறி தலைவா!

இடைவேளை வரை பட்டாசாகப் பறக்கும் படத்தில் அதன்பிறகு தண்ணீரை ஊற்றி நமநமத்துப் போக வைத்துவிடுகிறார் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ்.அவரின் வழக்கமான திரைக்கதை மேஜிக் இப்படத்தின் பின்பாதியில் இல்லாதது பேரிழப்பு. கதைப்பஞ்சம் முருகதாஸின் ரைட்டிங்கில் வரவர அப்பட்டமாக தெரிகிறது. கவனம் சாரே!

என்ன தான் ரஜினி படமாக இருந்தாலும் லாஜிக் என்பது மருந்தளவிற்கு கூட வேண்டாமா? லாஜிக் மேட்டரை அடுக்கினால் 200 பக்கம் எழுதலாம். மேலும் 200 கோடி பட்ஜெட் என்கிறார்கள். அந்தப்பிரம்மாண்டம் எங்கேயும் தெரியவில்லை. சம்பளத்திலே அடங்கி விட்டதோ என்னவோ?

சரி படமாக எப்படி இருக்கிறது என்று கேட்டால் ஒரு பதில் உண்டு. ரஜினி எப்படி அதகளம் செய்கிறார் என்பாதை என்சாய் பண்ணி காண்பதற்காகவே தர்பாரை புக் பண்ணவும்!