‘நடிப்பெல்லாம் வேணாமுங்க!’ : மகள் விஷயத்தில் உஷாரான கெளதமி

0

gaudhami

13 வருஷம் தாலிகட்டாமலேயே உலகநாயகனுக்கு எல்லாமுமாக இருந்தார் கெளதமி.

இருவரின் 13 வருட குடும்ப வாழ்க்கை முடிவுக்கு வரக்காரணமே கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசனுடன் ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பில் ஏற்பட்ட காஸ்ட்யூம் பஞ்சாயத்து தான் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

நாளை கமலுக்கு பிறந்தநாள் என்றால் இன்றைக்கு ”என் மகளில் எதிர்காலம் எனக்கு முக்கியம். அதற்காகவே நான் கமலைப் பிரிகிறேன்” என்று அதிகாரப்பூர்வமாக அறிக்கை விட்டு அன்றைய ட்ரெண்டிங் நாயகி ஆனார் கெளதமி.

மகளின் எதிர்காலம் என்றதும் அவர் தனது மகளை சினிமாவில் நடிக்க வைக்கப்போகிறார் என்றும் அதற்காக நடிகர் தனுஷிடம் மகளுக்காக பட வாய்ப்பு கேட்டார் என்று மீடியாக்களில் செய்திகள் கசிந்தன. இதைக் கேள்விப்பட்டதும் சில இயக்குநர்களும் கெளதமியின் மகளை தங்கள் படங்களில் நடிக்க வைக்க அணுகியிருக்கிறார்கள்.

அவ்வளவு தான், கமல் சமாச்சாரம் மாதிரி இதில் அமைதி காத்து அறிக்கை விடக்கூடாதென்று ”என் மகள் நடிக்கப் போகிறார் என்று வந்த செய்திகள் எல்லாமே வதந்தி தான். அவள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். நடிப்பில் இல்லை. அதை யாரும் நம்ப வேண்டாம்” என்று தாமதம் செய்யாமல் உஷாராக மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

இந்த மறுப்புக்கு எத்தனை வருஷம் வேலிடிட்டியோ?

Leave A Reply