இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கார்த்தி நடிக்கும் ‘தேவ்’
பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் எஸ். லட்சுமண் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் ஆக்ஷன், த்ரில்லர் அட்வெஞ்சர் திரைப்படம் ‘தேவ்’.
கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் இணைந்து நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் டப்பிங் இன்று அக்டோபர் 10ம் தேதி பூஜையுடன் துவங்கியது. நாயகன் கார்த்தி முதல் நாளான இன்று டப்பிங் பேசி துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து நாளை கார்த்தி மற்றும் படக்குழு குலு மணாலிக்கு மீண்டும் படப்பிடிப்புக்கு செல்கிறது. ஏற்கனவே ‘தேவ்’ படக்குழுவினர் குலுமணாலியில் படப்பிடிப்புக்கு செல்லும் வழியில் அங்கே கன மழையால் ஏற்பட்ட பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணத்தால் படப்பிடிப்பு நடத்த முடியாமல் திரும்ப வந்தது நாம் அறிந்த ஒன்று.
அங்கே எடுக்கப்படாமல் விட்டுப்போன காட்சிகளை தற்போது மீண்டும் அங்கே படமாக்க உள்ளனர். அதைத் தொடர்ந்து படத்தின் முக்கியமான சேஷிங் காட்சிகளும், மிகப்பிரமாண்டமான சண்டைக்காட்சியும் இமாலயமலையில் படமாகிறது. தற்போது நடைபெறும் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு 12 நாட்கள் குலுமணாலி மற்றும் இமாலயமலைகளில் தொடர்ந்து நடைபெறுகிறது. இதோடு இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்குகிறது.
சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, வாய், பஞ்சகனி, குலுமணாலி, குல்மார்க், இமாலயா, உக்ரைன், லீவின் அண்ட் கியூ உலகின் உயரமான மலை பிரதேசமான கார் தா ஹாயின் போன்ற பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இப்படத்தின் பஸ்ட்லுக் விரைவில் வெளிவர இருக்கிறது.