‘சாதிப்பட இயக்குனர்’ என்று அடையாளப்படுத்த வேண்டாம் – இயக்குனர் முத்தையா வேண்டுகோள்

Get real time updates directly on you device, subscribe now.

”சாதிப்படம் எடுப்பாரே அவரா” என்று தான் எல்லோரும் சொல்கிறார்கள். அந்த அடையாளத்திலிருந்து வெளியே வர விரும்புகிறேன் என்றார் இயக்குனர் முத்தையா.

‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’, ‘மருது’ உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையாவின் இயக்கத்தில் அடுத்து தயாராகியிருக்கும் படம் தேவராட்டம்.

கெளதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் சார்பில் கே.ஈ ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.

மே 1-ம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தைப் பற்றி இயக்குநர் முத்தையா பேசியதாவது, “நான் படிப்பில் மிடில் கிளாஸ் தான். இந்தப்படத்தில் வேலை செய்த எல்லோருமே படித்தவர்கள். ஹீரோ, கேமராமேன், இசை அமைப்பாளர் இவர்களோடு வேலை செய்வது மனைவியோடு லைப் நடத்துவது போல. சரியாக இல்லாவிட்டால் சிக்கல் தான்.

Related Posts
1 of 148

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சாரிடம் கொம்பன் படம் நேரத்திலே கவுதமை வைத்து படம் எடுக்கலாம் என்றேன். அவர் கார்த்தியைத் தாரேன் என்றார். ஆனால் இன்று ஞானவேல்ராஜா சார் படத்தில் கவுதம் கார்த்தி இருக்கிறார் இதுதான் அவரது வளர்ச்சி. ‘கொம்பன்’ படம் எனக்கு நல்ல அடையாளம்.

‘தேவராட்டம்’ சாதிப்படம் கிடையாது. எனக்கு அகு தெரியவும் தெரியாது. குடும்ப உறவுகளைப் பற்றிய படம் தான் இது. ஏன் உன் படத்தில் அருவாள் இருக்கிறது என்கிறார்கள். கமர்சியல் படம் என்றால் அதை வைத்து தான் ஆக வேண்டிய இருக்கிறது. வெளியில் வந்தால் தான் பிரண்ட்ஷிப். வீட்டுக்குள் வந்தால் உறவு தான். உறவுகள் சரியாக இருந்தால் தவறுகள் நடக்காது.

பொள்ளாச்சி சம்பவத்தில் அப்படி ஈடுபட்டவர்களை பலரும் வெட்டவேண்டும் கொல்ல வேண்டும் என்றார்கள். அதை நிஜத்தில் செய்ய முடியவில்லை. அதனால் தான் அதைப் படத்தில் வைக்கிறோம். கோபத்தின் வெளிப்பாடு தான் ஹீரோவின் கேரக்டர். பணம் என்பது சினிமாவுக்கு ரொம்ப முக்கியம். அதனால் தான் கமர்சியல் விசயங்களை படத்தில் அதிகமாக வைக்கிறேன். சிட்டியில் படம் எடுத்தாலும் உறவுகளைப் பற்றித்தான் படம் எடுப்பேன்.

தயவு செய்து என்னை சாதிக்குள் கொண்டுபோய் விடாதீர்கள். இந்தப்படத்தை இவ்வளவு சீக்கிரமாக எடுக்க முடிந்ததிற்கு படத்தில் படத்தில் உழைத்த அனைவரும் காரணம். இந்தப்படத்தை முழுதும் பார்த்துவிட்டு ஞானவேல்ராஜா சந்தோஷப்பட்டார். அதுதான் எனக்கு முதல் சந்தோஷம்.” என்றார். மேலும் படத்தில் கடும் உழைப்பை கொடுத்த ஹீரோ உள்பட அனைவருக்கும் நன்றி சொன்னார்.