தாராளபிரபு- விமர்சனம்

உயிர் அணுக்கள் தானம் என்ற மேட்டர் இதுவரை தமிழ்சினிமாவில் சொல்லப்படாத வகை . அதை ஹிந்தியில் வெளியான விக்கி டோனர் படத்தை தாராளபிரபுவாக மாற்றி எனர்ஜியாகச் சொல்லி இருக்கிறார்கள். ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலைக்கு முயற்சி செய்யும் ஹரிஷ்கல்யாண் டாக்டர் விவேக் மூலம் ஒரு ஸ்போம் டோனராக மாறுகிறார். அவர் மீது காதல் கொள்ளும் ஹீரோயினுக்கு ஒரு கட்டத்தில் இந்த உண்மை தெரிய வர அடுத்து என்னானது என்பதே தாராளபிரபு.

படத்தின் முன்பாதியில் தாராளமான நகைச்சுவை காட்சிகள் இருந்தாலும் கூடுமான வரை இரட்டை அர்த்த வசனங்களைத் தவிர்த்திருப்பது சிறப்பு. கத்தி மேல் நடப்பது போன்ற காட்சிகளையும் கத்தி மாதிரி ஷார்ப்பாகச் சொல்லி ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் இயக்குநர். கூடுதலாக பின்பாதியில் அப்படியே படத்தை எமோஷ்னல் மோடுக்கு மாற்றியும் நம்மை ரசிக்க வைத்துள்ளார். படம் அறம் பேசுகிறதா என்றால் அக வாழ்க்கையில் தேவையான அறத்தைப் பேசியும் உள்ளது. மனைவிக்கு வாழ்வில் குழந்தை தான் தெய்வமாக தெரியும். அவர்களின் ஆன்மாவின் அடிநாதமாக குழந்தை என்பதே இருக்கும். அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டிய பெருங்கடமை கணவன்களுக்கு இருக்கிறது என்பதையும், இயற்கையாக அதற்கான வாய்ப்பு இல்லாத பட்சத்தில் அதை செயற்கையாக வரவழைத்துக் கொள்வதிலும் தவறில்லை என்பதைப் படம் சொல்கிறது..

Related Posts
1 of 10

படத்தின் மெயின் ஹீரோ விவேக் தான். மனிதர் ஒவ்வொரு காட்சியிலும் காமெடி குணச்சித்திரம் என அரசாட்சிப் புரிந்துள்ளார். ஹரிஷ் கல்யாண் இந்தக் கேரக்டருக்குள் தன்னை அநாயசமாகப் பொருத்திக் கொள்கிறார். ஹீரோயினுக்கு அழகும் நடிப்பும் சம அளவில் வாய்த்துள்ளது சிறப்பு.

சச்சு, அனுபமா, செந்தில்குமரன் போன்ற கதாப்பாத்திரங்களும் நம்மை கவனிக்க வைக்கிறார்கள். படத்தின் பாடல்கள் தேவையான இடங்களில் மட்டுமே வருவதால் அலுப்பு தெரியவில்லை. பின்னணி இசையிலும் சோர்வென்பது இல்லை. கன கச்சிதமான ஒளிப்பதிவு படத்தின் ஆகப்பெரும் எனர்ஜி.

முன்பாதியில் இருந்த வேகம் படத்தின் பின் பாதியில் குறைந்தாலும் போர் அடிக்கவில்லை என்பது ப்ளஸ். ஹீரோ ஏன் தான் உயிரணுக்கள் டொனைக்ட் பண்றவன் என்பதை ஹீரோயினிடம் சொல்லத் தயங்குகிறார் என்பதை இன்னும் அழுத்தமாகச் சொல்லி இருக்கலாம்.

இந்த வாரக் கடைசியை தாராளபிரபுவோடு தாரளமாகச் செலவிடலாம்
3.5/5