எம்.பிக்களும் எம்.எல்.ஏக்களும் தற்கொலை செய்து கொள்ளுங்கள்! : இயக்குநர் அமீர் ஆவேசம்

0

னது அடுத்த படத்துக்கான வேலைகளில் மும்முரமாகி ஈடுபட்டு வந்தாலும் மக்கள் பிரச்சனைகளிலும் அவ்வப்போது பங்கெடுத்து வருகிறார்.

குறிப்பாக தமிழ்நாட்டில் வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்கிற அளவுக்கு சென்றிருக்கிறார்கள். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்த பிரச்சனையில் விவசாயிகளின் தற்கொலையைக் தடுக்கக் கோரி சென்னை சேப்பாக்கத்தில் இளைஞர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் அமீர் தமிழக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் குறித்து காட்டமான கருத்துகளை பேசினார்…

இந்தப் போராட்டத்தை ஒரு சிறுபொறியாக நான் பார்க்கிறேன். இது இப்போது தான் ஆரம்பமாகி இருக்கிறது. முழுவதுமாக வெற்றி அடைந்து விட்டோம் என்று சொல்ல முடியாது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள அவல நிலை இது.

ஒரு உழவனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான போராட்டமாக இது உள்ளது. இப்படி ஒரு போராட்டத்தை இளைஞர்கள் நடத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டதற்காக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.

விவசாயிகள் தற்கொலைக்கு பொறுப்பேற்று அரசு ராஜினாமா செய்ய வேண்டும். விவசாயிகளை காப்பாற்றாத அரசு கலைக்கப்பட வேண்டும். மக்களுக்கான ஆட்சி இங்கு உருவாக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள அத்தனை எம்பிகள், எம்எல்ஏக்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். ஜாதிப் பிரச்சனை, மதப் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்று விவசாயிகள் பிரச்சனைக்கும் முகம் கொடுக்க வேண்டும். வேளாண்மை தான் முதன் பிரச்சனை என்பதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

விவசாயிகளின் பிரச்சனை இப்படியே போனால் இந்தியா இன்னும் கொஞ்சம் நாட்களில் பிச்சை எடுக்க வேண்டிய நிலைமை வரும் என்றார் அமீர்.

அமீர் சொல்றது ஆட்சியாளர்கள் மண்டையில ஏறினா சரிதான்!