பாரதிராஜாவை எதிர்க்கும் தயாரிப்பாளர்

Bharathiraja Producer Council
இயக்குநர் பாரதிராஜா புதிய தயாரிப்பாளர் சங்கம் துவங்கியதைத் தொடர்ந்து கலைப்புலி தாணு, பாரதிராஜா பழைய சங்கத்திற்கு தலைவராக வர வேண்டும் என்றும், அவரை ஒருமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுப்போம் என்றும் சொல்லி இருந்தார். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர் சிங்காரவேலன் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார் அதன் விபரம் வருமாறு,

சங்கத்தில் 1351 பேர் வாக்களிக்கும் தகுதி படைத்தவர்கள் இருக்கிறார்கள்.

இந்த சங்கத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சரியான நிர்வாகிகள் தேர்வாகவில்லை.

இதனால் தயாரிப்பாளர்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது.

பாரதிராஜா கிட்டதட்ட 100 தயாரிப்பாளர்களுடன் புதிய சங்கம் ஆரம்பித்து இருக்கிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆலோசனை கூட்டத்தில் தாணு புகார் தெரிவித்தார்

ஆனால் பத்திரிகையாளர் சந்திப்பில் தாணு பேசும் போது, பாரதிராஜா மீண்டும் சங்கத்திற்கு வாருங்கள்… உங்களுக்கு அன்னபோஸ்ட்டாக தலைவர் பதவி கொடுக்கிறோம் என கூறியிருக்கிறார்.

தாணுவின் சொந்த கருத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே தொடர்ந்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் இணைந்து ஒரு அணியை உருவாக்கி இருக்கிறோம்.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் புதிய அணியாக களமிறங்க இருக்கிறோம்” என்றார் சிங்காரவேலன்.