சினிமா மீது மரியாதை உண்டு; ஆனால் நடிக்க விருப்பமில்லை – சத்யராஜ் மகள் திட்டவட்டம்

0

டிகர் சத்யராஜ் வழியில் அவருடைய மகன் சிபிராஜும் தற்போது சினிமாவில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

சிபிராஜைத் தொடர்ந்து சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜும் படங்களில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. தற்போது ஊட்டச்சத்து மருத்துவராக பணியாற்றி வரும் அவர் தனக்கு அப்படி ஒரு ஐடியாவே இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது, ”நான் சினிமாவில் நடிக்கப் போவதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. அப்படிப் பரவும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை. நான், சினிமாவில் நடிக்க விரும்பவும் இல்லை. நான் கடந்த 7 ஆண்டுகளாக சென்னையில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் ஊட்டச்சத்து மருத்துவராக பணியாற்றி வருகிறேன். மேலும் ஊட்டச்சத்து குறித்த பிஎச்.டி உயர் படிப்பிலும் கவனம் செலுத்தியிருக்கிறேன்.

சினிமா மீது எனக்கு அதீத மரியாதை உண்டு. அடிக்கடி படங்கள் பார்த்து ரசிப்பேனே தவிர, படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததில்லை. ஊட்டச்சத்து சம்பந்தப்பட்ட ஒரே ஒரு ஆவணப்படத்தில் மட்டுமே நடித்திருக்கிறேன். ஆனால் அது திரைப்படம் இல்லை” இவ்வாறு திவ்யா சத்யராஜ் தெரிவித்திருக்கிறார்.

Leave A Reply