Banner After Header

உலகமே கொண்டாடும் இளையராஜாவை கழுவி கழுவி ஊற்றிய கங்கை அமரன்!

0

 

maxresdefault

”எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல், வேறொன்றறியேன் பராபரமே” என்கிற சொலவடைக்கு அர்த்தம் சொல்வது போலவே முகம் முழுக்க சந்தோஷத்தோடு பேசுபவர் கங்கை அமரன்.

அது எந்த பொதுமேடையாக இருந்தாலும் மனதில் இருப்பதை வெளிப்படையாகப் பேசுவார். திறமையாளர்களை மனம் திறந்து பாராட்டுவார். அப்படிப்பட்டவர் கடந்த சில ஆண்டுகளாகவே தனது அண்ணனும் இசையமைப்பாளருமான இசைஞானி இளையராஜாவை ஏறுகிற மேடைகளில் எல்லாம் கிடைக்கிற மைக்கைப் பிடித்து கழுவி கழுவி ஊற்ற ஆரம்பித்திருக்கிறார்.

ஏற்கனவே ஒரு மேடையில் ”நான் பாட்டுக்கச்சேரி பண்ணப்போறப்ப எல்லாம் ”வாய்ப்பு இல்லாதவங்க தாண்டா மேடைக் கச்சேரியெல்லாம் பண்ணப் போவாங்க” என்று கிண்டல் செய்வார் என் அண்ணன். இப்போது அவரே பல வெளிநாடுகளுக்கு கச்சேரி பண்ணப் போகிறார் என்றால் இப்போது அவர் மார்க்கெட் எப்படியிருக்கிறது?” என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்” என்று கருத்து சொல்லி சலசலப்பை ஏற்படுத்தியிருந்தார் கங்கை அமரன்

அதுபோலவே நேற்றும் தனது இயக்கத்தில் தயாராகியிருக்கும் ”கோடிட்ட இடங்களை நிரப்புக” இசை விழாவை தனது குரு கே.பாக்யராஜூக்கு பாராட்டு விழாவாக மாற்றியிருந்தார் நடிகரும், இயக்குநருமான ஆர்.பார்த்திபன். அந்த விழாவில் மைக்கைப் பிடித்த கங்கை அமரன் பேச்சில் அனல் பறக்க, சொல்லாமல் விட மாட்டேன் என்கிற முடிவோடு இளையராஜாவை கழுவி கழுவி ஊற்ற ஆரம்பித்தார்…

”நான் ‘கிழக்கே போகும் ரயில்’ படத்துக்குக்கு அப்புறம் இசையமைப்பாளராகி விட்டேன். நான் இசையமைப்பாளர் ஆனதும் உனக்கென்னடா மியூசிக் தெரியும்னு இளையராஜா கிட்டார் வாசிக்கிறதிலேர்ந்து என்னை வெளியில அனுப்பிச்சிட்டார். அவர் அனுப்புன உடனே எனக்கு பட வாய்ப்புகள் நெறைய குமிஞ்சு போச்சு.

அதுக்கப்புறம் ‘புதிய வார்ப்புகள்’னு ஒரு படம் பாரதிராஜ ஆரம்பிச்சார். ஆரம்பிச்ச போது அந்தப்படத்துக்கு முதல்ல என்னைத்தான் ஹீரோவா பிக்ஸ் பண்ணினார். போட்டோஷூட் எல்லாம் நடத்தினாங்க. அதைப் பார்த்த உடனே டேய் இந்த மூஞ்சிக்கெல்லாம் எப்படிடா ரீ-ரிக்கார்டிங் பண்ணுறதுன்னு திட்டிட்டாங்க, அதுக்கப்புறம் அதுல பாக்யராஜ் நடிச்சார். அந்த வகையில அவர் கொடுத்து வெச்சவர்.

அடுத்து பாக்யராஜ் மியூசிக் பண்ணப்போறேன்னு முடிவு பண்ணினார். அவரோட கதை வசனத்துல என்னோட டைரக்‌ஷன்ல ஒரு படம் முடிவு செஞ்சோம். அந்தப்படத்துக்கு மியூசிக் பண்றதுக்கு அண்ணன்கிட்ட போய் கேட்டப்போ டேய் அவன் தான் மியூசிக் பண்ண வந்துட்டானே? அதனால அவன் படத்துக்கு என்னால மியூசிக் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டார். அப்புறம் கே.பாக்யராஜை கூப்பிட்டு அண்ணன்கிட்ட கொண்டு போய் விட்டேன்.

அவங்க பேசினாங்க. அப்படி பேசிட்டு வெளியில வந்த உடனே கே.பாக்யராஜ் அந்தப்படத்தோட டைரக்டர் ஆயிட்டார். நான் என்ன இது என்னை டைரக்டர்னு சொல்லிட்டு இப்போ நீங்க டைரக்ட் பண்றீங்களேன்னு கேட்டேன். அதுக்கு பாக்யராஜ் விளக்கம் சொன்னார். அதை நான் இங்க சொல்ல மாட்டேன்.

அதேமாதிரி முந்தானை முடிச்சி படத்துல நான் தான் மியூசிக்குன்னு முடிவு பண்ணியாச்சு. ஆனா ஏ.வி.எம் நிறுவனம் இளையராஜா தான் வேணும்னு சொல்லிட்டார். ஆனா விளம்பரத்துல என்னோட பேரை போட்டதால என்னால மியூசிக் பண்ண முடியாதுன்னு அண்ணன் சொன்னார்.
அப்புறம் பாக்யராஜ் ஏ.வி.எம்னு எல்லோரும் சமாதானம் பண்ணினாங்க. ஆனால் இந்தப்படத்துல கங்கை அமரன் தான் பாட்டு எழுதணும். அப்பத்தான் நான் மியூசிக் பண்ணுவேன்னு அண்ணன் கண்டிஷன் போட்டார். அவர் சொன்னபடியே அந்திவரும் நேரம், வா வா வாத்தியாரே, கண்ண தொறக்கணும்னு நான் எழுதின எல்லாப் பாடல்களும் ஹிட்டாச்சி.

எதுக்கு இந்த விஷயங்களை எல்லாம் சொல்றேன்னு பார்த்தீங்கன்னா எல்லோருக்கும் இருக்கிற சந்தோஷத்துக்கு பின்னாடியும் எவ்வளவோ சங்கடங்கள் இருக்கும். இதெல்லாம் ஒருத்தரோட உண்மையான கேரக்டரை தெரிஞ்சிக்கிற ஒரு வழி அதுல தப்பே இல்லை” என்றார் கங்கை அமரன்.

தம்பிக்கு உரிமையிருக்கு தான். அதுக்காக இப்படியா?

Leave A Reply

Your email address will not be published.