கேன்சரை பார்த்து பயப்பட வேண்டாம், அதை முழுமையாக குணப்படுத்தலாம்! – விழிப்புணர்வு கூட்டத்தில் கெளதமி பேச்சு

0

சென்னை பெசன்ட் நகரில் Life Again Foundation உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு புற்றுநோய் விழிப்புணர்வு கூட்டம் ஒன்று Winners Walks என்ற பெயரில் நடிகை கௌதமி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி்க்கு கௌதம் மேனன், பத்மபூஷன், பத்மவிபூஷன் டாக்டர்.ஷாந்தா, அன்பழகன், தயாரிப்பாளர் கலைப்புலி. எஸ்.தாணு, தேவயானி, ஜெயம் மோகன்ராஜா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகை கௌதமி பேசியதாவது “டாக்டர்.ஷாந்தா தமிழ்நாட்டை புற்றுநோய் இல்லாத மாநிலமாக மாற்ற நிறைய முயற்சிகளை மேற்கொண்டார். அவருக்கு மிகப்பெரிய நன்றி. Life Again Foundation இன்று நடத்திய Winners Walks நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்தது.

இந்த நிகழ்ச்சி நோக்கம், கேன்சரை குணப்படுத்தலாம், அதை வெல்லலாம் என்ற எண்ணம் எல்லோருக்கும் தெரிய வர வேண்டும் என்பதே ஆகும். கேன்சர் என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரும் பயப்படுகிறார்கள். அதை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை நமக்கு வேண்டும்.

முக்கியமாக கேன்சரை ஆரம்பகால கட்டத்திலேயே கண்டறிந்து குணப்படுத்த முயன்றால் முழுமையாக குணப்படுத்த முடியும்.

குழந்தைகள் முதல்பெரியவர்கள்வரை அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை பற்றி மற்றவர்களுக்கும் அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கும் கூற வேண்டும்” என்று அவர் கூறினார்.

Leave A Reply