இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு- விமர்சனம்


நம் தேசத்திற்கு ஆயுதம் தேவையா? என்ற ஒருமை கேள்வியை முன் வைக்காமல் இந்த உலகிற்கே ஆயுதம் தேவைதானா? என்ற பன்மை கேள்வியை முன் வைக்கிறது குண்டு.
குண்டு படம் சொல்ல வரும் மெசேஜ் மிக முக்கியமானது. அதனாலே இப்படத்தை ஆதரிக்க வேண்டும் என்பது முதல் தகவல் அறிக்கை.

இரும்புக்கடையில் வேலை செய்யும் தினேஷுக்கு சொந்தமாக லாரி வாங்க வேண்டும். தன்னை நேசிக்கும்..தானும் நேசிக்கும் ஆனந்தியை கரம் பிடிக்க வேண்டும் என்பது தான் இலக்கு.
இதற்கிடையில் கடலில் இருந்து கரையொதுங்கும் குண்டு ஒன்று அவரிடம் சேர்கிறது. அந்தக்குண்டை கைப்பற்றி ஊழலுக்கு ப்ளான் போடுகிறது ஒரு டீம். அதே குண்டை கைப்பற்றி அந்த
ஊழலை நிரூபிக்க முயற்சிக்கிறது இன்னொரு டீம். துண்டுச்சீட்டில் எழுதிவிடக்கூடிய அளவிலான கதை அல்ல இது. தேசிய அரசியல் இதுவரை பேசிய அரசியல் எல்லாம் இப்படத்தில்
இருக்கிறது.

Related Posts
1 of 2

தினேஷுக்கு இப்படம் மீண்டும் ஒரு மறுபிறவி. மனிதன் எங்கெல்லாம் வெடிக்க வேண்டுமோ அங்கெல்லாம் அமர்க்களமாக வெடிக்கிறார். ஆனந்தி போர்ஷன் மிகப்பெரிய அளவில் இல்லா
விட்டாலும் அவர் பெரிதாக குறை ஒன்றும் இல்லாமல் நடித்துள்ளார். படத்தின் இன்னொரு ஹீரோ முனிஷ்காந்த் தான். பின்பாதி படத்தை மொத்தமாக தாங்குகிறார். ரித்விகா வரும் காட்சிகளில் பேசி இருக்கும் விஷயங்கள் மிகவும் காத்திரமானவை. அதை மனதில்கொண்டு ரித்விகாவும் அந்தப்பாத்திரத்திற்கு தேவையான உணர்வை கொடுத்திருக்கிறார்.

டென்மாவின் இசை கிஷோரின் ஒளிப்பதிவு ராமலிங்கத்தின் ஆர்ட் வொர்க் என டெக்னிக்கலாகவும் குண்டு மிரட்டுகிறது. ஒரு கருத்தியலை வைத்துக்கொண்டு அதை எந்தச்சமரசமும் இல்லாமல் படம் எடுத்ததோடு அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் படம் எடுத்திருப்பதாலே குண்டுவின் இயக்குநர் அதியன் ஆதிராவைப் பாராட்டலாம்.
குண்டு வலுவான படைப்பு!
4/5