Banner After Header

ஜி.வி.பிரகாஷுடன் இணைந்த வெற்றிமாறனின் சிஷ்யர்!

0

ன்றைய தேதியில் தமிழ்சினிமாவில் கைவசம் அதிகப்படங்களை வைத்திருக்கும் ஹீரோக்களில் ஜி.வி.பிரகாஷும் ஒருவர்.

அந்த வரிசையில் தற்போது கே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் எஸ். என். ராஜராஜன் தயாரிக்கும் புதிய படத்தில் ஜிவி. பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கிறார்.

இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். ஜிவி. பிரகாஷுக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க இருக்கிறார். இவர் சீமதுரை, 96, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.

இவர்களுடன், இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்டைலிஷ் இயக்குநரான கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்திருக்கிறார். ஜி.வி.பிரகாசுடன் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறை. மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் வாகை சந்திரசேகர் மற்றும் அறிமுக நடிகர் குணா நடிக்கிறார்கள்.

ஜிவி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இவர் அண்ணனுக்கு ஜே, வெள்ளை யானை படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர். படத்தொகுப்பை எஸ். இளையராஜா கவனிக்கிறார்.

இப்படத்தில் ஜிவி பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார். ஒரு மாணவனுக்கு கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்‌ஷன் கலந்து திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். காதல், எமோஷனல், ஆக்‌ஷன் என முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக தயாராக இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.