வயசானவங்க எல்லாம் ஓடிப்போயிடுங்க…. : நயன்தாராவை காப்பியடிக்கும் ஹன்ஷிகா!

0

hanshika1

”குஷ்பு மாதிரி கொழு கொழுன்னு இருக்காப்ல” என்று உசுப்பேத்தியே ஹன்ஷிகாவை கொண்டாடியது தமிழ்சினிமா.

அப்படியே பிக்கப் ஆகி மாஸ் ஹீரோக்களின் படங்களில் நடிக்க அடுத்தடுத்து புதுப்பட வாய்ப்புகளும் வந்தது.

பிஸியான நடிகை என்கிற முத்திரையெல்லாம் ஹன்ஷிகா மீது விழுந்தது.

ஆனால் இதெல்லாம் கொஞ்ச காலம் தான். சிம்புவுடன் காதல் என்கிற தகவல் பரவவும் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது.

இதனால் கதையே கேட்காமல் புதுமுக ஹீரோ நடிக்கும் படத்தில் கூட சம்பளத்துக்காக நடிக்க ஆரம்பித்தவர் கூடவே எக்கச்சக்கமாக வெயிட்டும் போட்டார். அதுவரை வந்து கொண்டிருந்த ஒன்றிரெண்டு வாய்ப்புகளும் வெயிட் போட்டதால் வந்த வழியில் திரும்பி விட்டது.

கைவசம் ஜெயம் ரவியோடு ‘போகன்’ பட வாய்ப்பை மட்டும் வைத்திருக்கும் ஹன்ஷிகா தற்போது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற தென்னிந்திய மொழிகளில் வாய்ப்பு தேட ஆரம்பித்திருக்கிறார்.

அப்படி தேடுகிற படங்களில் வழக்கம் போல மாஸ் ஹீரோக்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் வயசான ஹீரோக்களுடன் டூயட் பாடி, ரெண்டு டயலாக்குகளை பேசிவிட்டு கேரக்டராக இல்லாமல், நயன்தாரா ஃபார்முலாவில் நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளாக இருந்தால் உடனே கால்ஷீட் கொடுப்பது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.

அது மட்டுமல்ல, இனி தமிழில் விஜய் சேதுபதி மாதிரியான கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிற ஹீரோக்களின் படங்களுக்கு மட்டும் கால்ஷூட் கொடுப்பது என்றும் முடிவு செய்திருக்கிறாராம்.

நல்ல முடிவு… வாய்ப்புகள் வரணுமே..?

Leave A Reply

Your email address will not be published.