Banner After Header

இருமுகன் – விமர்சனம்

0

 

irumugan-review

RATING : 3.5/5

டத்துக்குப் படம் விதவிதமாக கெட்டப்புகளைப் போட்டு ரசிகர்களை சொக்க வைப்பதில் விக்ரமுக்கு நிகர் விக்ரம் தான். அதற்காகவெல்லம் ஸ்பெஷல் கிளாஸ் எடுக்கத் தேவையில்லை. அந்த கை வந்தக் கலையை ‘ஐ’ படத்துக்குப் பிறகு இந்தப் படத்திலும் தொடர்ந்திருக்கிறார் மனுஷன்.

‘அரிமா நம்பி’யில் ஒரு சைலண்ட் கொலையாளியாக மாறிப்போன சென்ட்ரல் மினிஸ்டரின் பின்னணியை இஞ்ச் பை இஞ்ச் விறுவிறுப்பைக் கூட்டித் தந்த ஆனந்த் சங்கர் தான் இந்த இருமுகனையும் இயக்கியிருக்கிறார்.

மலேசியாவில் இருக்கும் இந்திய தூதரகத்துக்குள் ஒரு பெரியவர் நுழைகிறார். திடீரென்று மூச்சிரைக்கும் கையில் வைத்திருக்கும் ஒரு இன்ஹெலரை இழுக்கிறார்.

அவ்வளவு தான். முழு பலசாலியாக மாறும் அவர் அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் அந்த தூதரகத்தை ”தாறு மாறு தக்காளி சோறு” ஆக்குகிறார்.

அதிர்ந்து போகும் இந்திய உளவு அமைப்பான ‘ரா’  சம்பவத்தின் வீடியோ தொகுப்பில் பெரியவரின் பின்பக்க கழுத்தில் ‘இதய’ அடையாளம் ஒன்று இருப்பதைப் பார்த்ததும் அந்த சம்பவத்தின் பின்னணியில் ‘லவ்’ என்கிற வில்லன் விக்ரம் என்பது தெரிய வருகிறது.

வில்லனை நெருங்க ஹீரோவால் மட்டும் தானே முடியும்? வருகிறார் அதே ‘ரா’ அமைப்பில் தனது மனைவி நயன்தாராவுடன் வேலை செய்து சஸ்பெண்ட்டில் இருக்கும் விக்ரம். அவரது உதவியோடு வில்லன் விக்ரமை இந்திய ‘ரா’ அமைப்பு நெருங்கியதா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

எம்.ஜி.ஆரும் நான் தான், நம்பியாரும் நான் தான் என்று சொல்லுகிற அளவுக்கு ஹீரோ, வில்லன் என இரண்டு கேரக்டர்களிலும் உடல்மொழிகள், டயலாக் டெலிவரி, காஸ்ட்யூம்கள் என எல்லா விஷயங்களிலும் நெறையவே வித்தியாசத்தை காட்டி நடிப்பில் ”செம சீயான்” ஆகிறார் விக்ரம். குறிப்பாக அன்பறிவ், ரவிவர்மா அன்கோ தந்த ஆக்‌ஷன் மூவ்மெண்ட் அத்தனையிலும் மாமனார் ஆயிட்டாலும் இன்னும் ஆக்‌ஷன் ஸ்பீடு குறையாம இருக்காரே..? என்று சொல்ல வைக்கிறார்.

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவிலேயே நயன்தாராவின் அழகு அட இம்புட்டுத்தானா..? ரேஞ்சில் எக்ஸ்போஸ் ஆகிறது. குறை கேமராவில் இல்லை. நயன்தாரா வனப்பில்..!! ( வயசும் ஏறிக்கிட்டே போகுதுல்ல…) முதல் பாதியில் ஒரே ஒரு டூயட்டோடு காணாமல் போகும் நயன் இண்டர்வெல்லுக்குப் பிறகு ரிட்டர்ன் ஆவது ரசிகர்களுக்கு ஆறுதல்.

விக்ரமோடு விசாரணை அதிகாரியாக வருகிறார் நித்யாமேனன். கெட்டப் சேஞ்சுக்காக அவர் போடும் ஒரு கெட்டப் ரசிகர்களின் மனசுக்குள் லப்டப்!

காமெடிக்கு தம்பி ராமையாவை இறக்கி விட்டிருக்கிறார்கள். சீரியஸாகப் போகும் திரைக்கதையில் அவர் வரும் காட்சிகள் தான் ரசிகர்களுக்கு ரிலாக்ஸ் டைம்!
மலேசியக் கதை என்றாலே ரித்விகா கதறி அழ ஆரம்பித்து விடுவார் போலிருக்கிறது. கபாலியைத் தொடர்ந்து அழுகாச்சி வேஷம் அவருக்கு இந்தப்படத்திலும் அது தொடர்கிறது! அடுத்த கலைராணி ஆயிடுவீங்க போல..?

ஹிட்லர் போரில்  எதிரிகளை வெல்லை தனது வீரர்களுக்கு ஸ்பீடு என்கிற சமாச்சாரத்தை கண்டுபிடித்து அதை வைத்துத்தான் பல நாடுகளை தன் வசம் வீழ்த்தினார் என்கிற யாரும் அறிந்திராத ஒரு வரலாற்று விஷயத்தை வைத்து மொத்தப் படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் ஆனந்த் சங்கர். அந்த விஷயத்தை விவரிக்கும் போது காட்டப்படுகிற காட்சிகளும் அபூர்வத்திலும் அபூர்வம்.

மலேசியா, காஷ்மீரின் அழகு மட்டுமல்ல… படத்தின் ஒவ்வொரு சீனின் அழகையும் எந்த ஒடிதலும் இல்லாமல் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்.

படம் முழுக்க ஏகப்பட்ட செட்டுகளைப் பார்க்க முடிகிறது. அதிலும் வில்லன் விக்ரம் இருக்கும் ஏரியா வடிவமைப்பில் கலை இயக்குநரின் உழைப்பு அப்பட்டமாகத் தெரிகிறது.

சிறைக்குள்ளேயே இன்ஹேலரை கொண்டு போய் அங்கிருந்து தப்பிப்பது, கண்ணில் படுகிற எல்லோரையும் இரக்கமில்லாமல் போட்டுத் தள்ளுகிற லவ் விக்ரம் ஹீரோ விக்ரமை மட்டும் கிளைமாக்ஸ் முடியும் வரை விட்டு வைப்பது, கருணாகரன் எந்தவித மிரட்டலும் இல்லாமலேயே அப்ரூவராக மாறுவது இப்படி சில கண்ணுக்கு வெளிப்படையாகத் தெரியும் லாஜிக் மீறல்களை கண்கொண்டு பார்த்து சரி செய்திருக்கலாம்.

இதுபோன்ற ஆக்‌ஷன் , த்ரில்லர் படங்களுக்கு பாடல்கள் எப்போதுமே பெருந்தடை தான். அந்தத் தடையை தனது இசையால் செவ்வனே செய்திருக்கிறார் ஹாரீஸ் ஜெயராஜ். அதிலும் பின்னணி இசைக்கெல்லாம் அதிகம் மெனக்கிட்டதாகத் தெரியவில்லை. டைட்டில் கார்டில் ஆரம்பிக்கும் ஒரு பின்னணி இசை கிளைமாக்ஸ் வரை அதே வாசிப்பு தான். (இந்த ஒரு வாசிப்புக்குத்தான் மாசக்கணக்குல டைம் ஆகுதா ஹாரிஸ் ஜீ..?)

”ஸ்பீடு இன்ஹெலர்” என்கிற வரலாற்றில் பொதிந்திருந்த யாரும் அறிந்திராத ஒரு மேட்டரை ஆக்‌ஷன், த்ரில்லராக விறுவிறுப்பை எஸ்க்ட்ராவாக்கி தந்திருக்கிறார் இயக்குநர் ஆனந்த் சங்கர்.

இருமுகன் – ஸ்பீடு மாமு!

Leave A Reply

Your email address will not be published.