ஜடா- விமர்சனம்

புட்பால் ஜடாவுக்கு (கதிர்) மக்கள் பிகில் அடிக்க ஒரு செவன்த் போட்டியில் கலந்து ஜெயிக்க வேண்டும் என்பது விருப்பம் மட்டும் அல்ல..வெறி. அதற்கான காரணம் பின்கதையில் உள்ளது. முதலில் செவன்த் மேட்ச் அப்படியென்றால் என்ன என்பதை பார்த்திடலாம். பதினோர் பேர் விளையாட வேண்டிய புட்பால் விளையாட்டில் ஏழுபேர் மட்டுமே விளையாடுவார்கள். இந்த செவன்த் மேட்சில் எந்த ரூல்ஸும் கிடையாது. அதனால் கோல் அடிக்கும் கேப்பில் கால் உடைக்கும் விசயமும் நடக்கும்.

ஒரே நேர்கோட்டில் செல்லும் கதைகளைப் பார்த்தவர்களுக்கு வேறோர் ஜானரை அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர் போல அறிமுக இயக்குநர் குமரன். அதனால் இடைவேளை வரை புட்பாலை நோக்கிப் பயணிக்கும் படம் இடைவேளைக்குப் பிறகு ட்ராக் மாறுகிறது. நல்லவேளை முடிவில் வந்து மிகச்சரியாக எடுத்துக்கொண்ட களத்தில் படம் பொருந்தி முடிந்து விடுகிறது.

Related Posts
1 of 10

கதிர் ஒரு நடிகராக தன்னை எப்போதோ நிலை நிறுத்திக்கொண்டார். மேலும் இப்படத்தில் நடிப்பைக் குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றும் இல்லை. சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகி உள்பட அனைத்து நடிகர்களும் அவர்களுக்கான வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். யோகிபாபு காமெடியை இன்னும் மெருகேற்றி இருக்கலாம்.

படத்தின் பாஸிட்டிவ் மேட்டரில் இசை முக்கிய இடம் பிடிக்கிறது. சாம்.சி எஸ் அசத்தி இருக்கிறார். ஒளிப்பதிவு மூலமாக படத்தின் தரம் மேலும் கூடி இருக்கிறது.

சின்னச்சின்ன தடுமாற்றங்கள் படத்தில் தெரிந்தாலும் அறிமுக இயக்குநர் என்பதாலும், எந்த இயக்குநரிடமும் பணியாற்றாமல் படம் எடுத்தவர் என்பதாலும் குமரன் அடுத்தடுத்தப் படங்களில் ஏமாற்ற மாட்டார் என்று நம்பலாம்
2.5/5