ஜல்லிக்கட்டுக்கு ஆதரவா? எதிர்ப்பா? : கலைந்தது தனுஷின் ரெட்டை வேஷம்!

0

பாசக் குப்பைகளின் மொத்த குத்தைகைதாரர் சன்னி லியோன் மெம்பராக இருக்கும் பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல வாரிய அமைப்புகள் கொடுத்த அழுத்தங்களின் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாகவே தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறவில்லை.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெறும் என்று முந்தாநாள் வரை சொல்லி வந்த மத்திய அரசு கூட விவகாரம் கோர்ட்டில் இருப்பதால் நாங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை என்று சொல்லி விட்டது.

இதனால் கொந்தளிப்பில் இருந்த தமிழ்நாட்டு இளைஞர்கள் படை சில தினங்களுக்கு முன்பு சென்னை மெரீனா கடற்கரையில் ஒன்றுகூடி தங்கள் ஒற்றுமையை உலகுக்கு எடுத்துரைத்தார்கள்.

அவர்களின் இந்தப் போராட்டம் தலை நகர் டெல்லியிலும் தொடரும் அளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வருகிறது.

இந்நிலையில் கோலிவுட் பிரபலங்களும் ஜல்லிக்கட்டுவுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

கமல்ஹாசன், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஜி.வி.பிரகாஷ் என பலரும் ஆதரவு தெரிவித்து வர, இதில் தானும் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதாகச் சொல்லி ரசிகர்கள் வசமாக சிக்கி வசவுகளை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ்.

ஏற்கனவே பீட்டா என்கிற அமைப்புக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் த்ரிஷா, ஆர்யா உள்ளிட்டவர்களை வறுத்தெடுத்து வருகிறது இளைஞர் பட்டாளம்.

அதே அமைப்புக்கு ஆதரவாளராக மாறி, அதன் புரமோஷன்களில் தலை காட்டியவர் தான் தனுஷ். அப்படிப்பட்டவர் நேற்று திடீரென்று நானும் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவாளன் தான் என்கிற ரேஞ்சில் கருத்து சொல்லவும் ரசிகர்கள் கொந்தளித்து விட்டார்கள்.

உங்களின் இந்த ரெட்டை வேஷத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. நேற்று வரை பீட்டா அமைப்புக்கு விளம்பரம் செய்து விட்டு இன்றைக்கு ஜல்லிக்கட்டுவுக்கு ஆதரவாளராக மாறியது ஏன்? என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியதோடு மட்டுமில்லாமல் தனுஷ் பீட்டா அமைப்புக்கு சொம்பு தூக்கிய புகைப்படங்களையும் பகிர்ந்து அவருடைய ரெட்டை வேஷத்தை கலைத்து விட்டிருக்கிறார்கள்.

ரசிகர்களின் இந்த திடீர் தாக்குதலை சமாளிக்க முடியாத தனுஷ் அவர்களின் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் மாமனார் ரஜினி ஸ்டைலில் சைலண்ட் ஆகிக் கிடக்கிறார்.

இனிமேலாவது சூதானமா இருந்துக்கங்க தனுஷ்!

Leave A Reply

Your email address will not be published.