நான்காவது முறையாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

தொடர்ந்து நான்காவது முறையாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

‘க/பெ ரணசிங்கம்’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ்’ கே ஜே ராஜேஷ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் விருமாண்டி இயக்குகிறார்.

இவர் தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்த பெரிய கருப்பு தேவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts
1 of 211

படத்தில் ரணசிங்கமாக விஜய் சேதுபதி நடிக்க, அவருக்கு ஜோடியாக அரிய நாச்சியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் சமுத்திரகனி, யோகி பாபு, வேலா ராமமூர்த்தி, ‘பூ’ ராம் மற்றும் பலர் நடிக்கிறார்கள். கூடவே நடிகரும், இசையமைப்பாளருமான ஜி வி பிரகாஷ் குமாரின் தங்கை பவானி இப்படத்தில் அறிமுகமாகிறார்.

‘அடங்காதே’ பட இயக்குனர் சண்முகம் முத்துசாமி இப்படத்திற்கு வசனம் எழுத, படத்தொகுப்பை சிவா நந்தீஸ்வரன் ஏற்றிருக்கிறார். ஒளிப்பதிவு பொறுப்புகளை சுதர்ஷன் ஏற்றுக்கொள்ள, கலை லால்குடி என் இளையராஜா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் சண்டை காட்சிகளுக்கு பீட்டர் ஹைன் பொறுப்பேற்று இருக்கிறார்.

படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார். படப்பிடிப்பு ராமநாதபுரத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து படத்தின் பிற முக்கிய காட்சிகள் ஹைதராபாத், சென்னை மற்றும் துபாயில் நடைபெற இருக்கிறது.