Banner After Header

காளி பட ‘அரும்பே’ பாடலை ரசிகர்களுக்கு இலவசமாக வழங்கும் விஜய் ஆண்டனி!

0

தான் நடிக்கின்ற படங்களில் புதுமையைச் செய்வதில் சற்றும் தயக்கம் காட்டாதவர் இசையமைப்பாளரும், ஹீரோவுமான விஜய் ஆண்டனி. அந்த வகையில் கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் அடுத்த படமான ‘காளி’ தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்விக்க ஒரு புது யுக்தியை கையாண்டுள்ளது. ‘காளி’ படத்திற்காக சிறந்த பாடல்களை கொடுத்திருக்கிறாராம் விஜய் ஆண்டனி.

அந்தப் படத்தில் இடம்பெறும் ‘அரும்பே’ பாடலை நேற்று இசையமைப்பாளர் அனிருத் ரிலீஸ் செய்தார். இந்த பாட்டோடு இப்பாடலின் வீடியோவும் ரசிகர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது மற்றொரு சிறப்பம்சமாகும். இந்த ‘அரும்பே’ பாடலை ரசிகர்கள் சட்டப்பூர்வமான இலவச தரவிறக்கம் செய்ய Vijayantony.com என்ற இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார் இந்த ‘அரும்பே’ பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

இது குறித்து பாடலாசிரியர் விவேக் பேசுகையில், ”விஜய் ஆண்டனி சாரின் இசையில் நான் எழுதியிருக்கும் முதல் பாடல் இது. அவருடன் பணிபுரிந்து அருமையான அனுபவமாகும். கிருத்திகா அவர்களுடன் இதற்கு முன்பு ஒரு மியூசிக் வீடியோவிற்காக பணிபுரிந்திருந்தாலும் ஒரு படத்திற்காக அவருடன் பணிபுரிவது இதுதான் முதல் முறை.

இந்த படத்திற்காக விஜய் ஆண்டனி சார் மிகவும் அசத்தலான பாடல்களை தந்துள்ளார். இசையமைப்பாளராக அவர் தந்துள்ள அருமையான பாடல்களில் இப்பட பாடல்கள் நிச்சயம் இடம்பெறும். என்னை கவர்ந்த அவரது சிறந்த பாடல்களில் இப்பட பாடல்கள் நிச்சயம் இடம்பெறும். விஜய் ஆண்டனி சாரும் கிருத்திகா அவர்களும் எனக்கு தந்த சுதந்திரம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. எனது வரிகளை படித்ததும் விஜய் ஆண்டனி சார் எனக்கு கால் செய்து பாராட்டினார். இந்த பாடலும் இந்த படமும் நிச்சயம் தமிழ் சினிமா ரசிகர்களால் நிச்சயம் ரசிக்கப்பட்டு பாராட்டப்படும் என நான் நம்புகிறேன் ”

‘காளி’ படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் அம்ரிதா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவில், லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பில், சக்தி வெங்கட்ராஜின் கலை இயக்கத்தில், சக்தி சரவணனின் சண்டை இயக்கத்தில், பிருந்தாவின் நடன இயக்கத்தில் ‘காளி’ படம் தயாராகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.