‘காற்றின் மொழி’ பாடல் எழுதும் போட்டியில் வெற்றியாளர்களுக்கு பரிசு!

ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் திரைப்படம் ‘காற்றின் மொழி’.

இப்படக்குழு பாடல் எழுதும் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது.

இதில் தமிழகம் முழுவதிலுமிருந்து 700 பேர் பங்கேற்று இருந்தார்கள். அவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 66 பேர் ‘காற்றின் மொழி’ பாடல் எழுதும் போட்டி சார்ந்த விழாவில் பங்கேற்றனர்.

Related Posts
1 of 16

இதில் பாடலாசிரியர் மதன் கார்க்கி, இயக்குனர் ராதாமோகன் உள்ளிட்ட ஜாம்பவான்கள் பங்கேற்று பேசினார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் படத்தின் பாடல் சிடி வழங்கப்பட்டது. மேலும் சிறப்பாக பாடல் எழுதிய இருவருக்கு பரிசு வழங்கப்பட்டது. பாடலாசிரியர் மதன் கார்க்கி எல்லோரிடமும் தான் ‘காற்றின் மொழி’ படத்துக்கு பாடல் எழுதிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

பாப்டா நிறுவனம் சார்பாக ஜி. தனஞ்ஜெயன் தயாரித்து, ஜோதிகா நடித்து, ராதா மோகன் இயக்கியுள்ள காற்றின் மொழி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.