பத்திரிகையாளர்களின் எகோபித்த பாராட்டைப் பெற்ற ‘காற்றின் மொழி’

ஜோதிகா நடிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் உலகம் முழுவதும் நவம்பர் 16-ம் தேதியான இன்று வெளியாகியிருக்கிறது ‘காற்றின் மொழி’.

இதையொட்டி நவம்பர் 15-ம் தேதியான நேற்று இப்படத்தின் பிரத்யேக காட்சி பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டது. நாயகி ஜோதிகா, நாயகன் விதார்த், இயக்குனர் ராதாமோகன், தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் பலரும் பத்திரிகையாளர்களுடன் இப்படத்தை கண்டு களித்தனர்.

Related Posts
1 of 13

படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் அனைவரும் படக்குழுவினரை மனம் திறந்து பாராட்டினர். இப்படம் குடும்பத்தோடு சென்று பார்க்கக் கூடிய படமாக இருக்கிறது. நல்ல கருத்தைக் கொடுக்கும் படமாகவும், அந்தக் கருத்தை நகைச்சுவையோடு கலந்து கொடுக்கும் படமாகவும் இருந்ததாக கூறினர். படத்தில் இடம்பெற்றிருந்த நகைச்சுவைக் காட்சிகளை ரசித்தும் மகிழ்ந்தனர்.

அனைத்து பத்திரிகையாளர்களின் இந்த ஏகோபித்த பாராட்டுகளைப் பார்த்த படக்குழுவினர் மகிழ்ச்சி வெள்ளத்தின் திளைத்தனர்.

ராதாமோகன் இயக்கியிருக்கும் இப்படத்தை போப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ஜி.தனஞ்செயன், விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்செயன் ஆகியோர் தயாரித்துள்ளனர். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஹெச் காஷிப் இசையமைத்துள்ளார்.