‘கடலில் கட்டுமரமாய்’ – விவசாயிகளுக்காக ஒரு திரைப்படம்


‘கடலில் கட்டுமரமாய்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இப்படம் முழுக்க முழுக்க விவசாயிகளை மையப்படுத்தி எடுத்திருக்கிறார்கள். நடன இயக்குநர் ஸ்ரீதர் இப்படத்தைப் பற்றி கூறும்போது, ஒரு நல்ல கருத்துக்கு அனைவரும் ஆதரவு கொடுப்பார்கள் என்றார்.

அதேபோல், ‘ஜாகுவார்’ தங்கமும் வெளியிலிருந்து வரும் தயாரிப்பாளர்களுக்கு நாங்கள் எப்போதும் ஆதரவு கொடுப்போம். ‘தோல உரிச்சுப் போட்ருவேன் நிலத்துல கால வெச்சா’ என்று இப்படத்தில் இடம்பெற்றுள்ள வசனம் அனைத்து விவசாயிகளுக்கு பிடித்தமானதாக இருக்கும். இப்படம் நிச்சயம் வெற்றிபெறும் என்றார்.

சமீபகாலமாக விவசாயத்தை முன்னிறுத்தி பல படங்கள் வெளிவருவது சமூகத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்குவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்